வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தேடிவந்த ஸ்ரீதேவியை துரத்திவிட்ட உதயநிதி.. லியோவுக்கு போட்ட பெரிய கும்பிடு

Leo-Uthayanithi: லியோ ரிலீஸ் நாளை எதிர்பார்த்து மாத கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் இன்னும் சில தினங்களை கடப்பதற்குள் தவித்து தான் போகின்றனர். அந்த அளவுக்கு படம் பற்றிய எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது. ட்ரெய்லர் வெளிவந்த பிறகு சில சர்ச்சைகள் இருந்தாலும் இப்போது ஆர்வம் மட்டுமே ஆடியன்ஸுக்கு இருக்கிறது.

இந்நிலையில் லியோ வடிவில் தேடி வந்த வில்லங்கத்துக்கு உதயநிதி பெரிய கும்பிடாக போட்டு விட்டாராம். சமீப காலமாகவே விஜய்க்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு பகை என்ற ரீதியில் பல பிரச்சனைகள் கிளம்பியது. அதிலும் ஆடியோ லான்ச் நடக்காததற்கு இவரின் அரசியல் தான் காரணம் என்றும் பேசப்பட்டது.

Also read: விஜய், லோகேஷ் சண்டையில் சிக்கிய விக்கி.. பகிரங்கமாக கேட்ட மன்னிப்பு

அது மட்டுமல்லாமல் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு விநியோக உரிமை கிடைக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் செய்திகள் பூதாகரமாக வெடித்தது. அதை அடுத்து லியோ தரப்பிலிருந்து இதெல்லாம் உண்மை கிடையாது வெறும் புரளி தான் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் இந்தப் பிரச்சனை இப்போது வரை புகைந்து கொண்டு தான் இருக்கிறது. அதனாலேயே உதயநிதி தேடி வந்த ஸ்ரீதேவியை வேண்டாம் என்று லியோவுக்கு பெரிய கும்பிடாக போட்டு விட்டாராம். என்னவென்றால் லலித் சில முக்கிய ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டும் விற்காமல் தன் கைவசம் வைத்திருந்தார்.

Also read: விஜய்யை விட பல மடங்கு உயர்ந்த மகேஷ் பாபு.. இவங்கள வச்சுக்கிட்டு ஆணிய புடுங்க முடியாது

அதை இப்போது அவர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இந்த ஏரியாக்களில் உங்களுக்கு தேவைப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் உதயநிதி தரப்பிலிருந்து எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று திருப்பி அனுப்பி விட்டார்களாம்.

ஏனென்றால் இப்போது இந்த உரிமையை வாங்கும் பட்சத்தில் இதையும் மிரட்டி தான் அவர்கள் பிடுங்கி இருப்பார்கள் என்ற பேச்சு கிளம்பும். அதனாலேயே விஜய் சகவாசமே வேண்டாம் என்று அவர் ஒதுங்கி விட்டாராம். எதுவும் செய்யாமலேயே தேவையில்லாத பழி விழுந்த நிலையில் உஷாராக உதயநிதி இப்போது எஸ்கேப் ஆகி இருக்கிறார்.

Also read: விஜய்க்கு பெரிய முட்டு கொடுக்கும் அண்ணன்.. நம்ம குட்டு வெளி வந்துரும்னு நியாயப்படுத்தும் நடிகர்

Trending News