வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பணத்துக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்ட உதயநிதி.. அரண்மனை 4ல் குஷ்பூ உடன் நடந்த டீல்

Aranmanai 4: கோடை காலம் வந்தாலே திரை உலகம் பரபரப்பாக தான் இருக்கும். புது பட அப்டேட்டுகள், டீசர், ட்ரெய்லர் மட்டுமின்றி பிரம்மாண்ட படங்களும் ரிலீஸ் ஆகும்.

அந்த வகையில் பொங்கலுக்கு வர வேண்டிய அரண்மனை 4 இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரெய்லர் கூட ஒருவித மிரட்டலுடன் இருந்தது.

அதிலும் தமன்னா, ராசி கண்ணா என லட்டு லட்டான ஹீரோயின்களும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்காக உதயநிதி குஷ்பூ உடன் போட்ட டீல் தெரியவந்துள்ளது.

குஷ்பூ உடன் உதயநிதி போட்ட டீல்

அதாவது சுந்தர் சி இயக்கி இருக்கும் இப்படத்தை குஷ்பூ தயாரித்துள்ளார். இவர் பாஜகவை சேர்ந்தவர். அதேபோல் இப்படத்திற்கு மறைமுக பண உதவி செய்ததும் அதே கட்சியின் மற்றொரு பிரபலம் தான்.

இது இப்படி இருக்க இப்படத்தை வாங்கி வெளியிடுவது ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேறு ஒருவரை வைத்து உதயநிதி படத்தை வாங்கி உள்ளார்.

ஏனென்றால் அரசியல் களத்தில் இவர்கள் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் பணத்திற்கு முன் இந்த கொள்கை எல்லாம் தூசு தான்.

அதனாலேயே அவர் இப்போது அரண்மனை 4 மூலம் லாபம் பார்க்க தயாராகி விட்டார். இந்த தகவலை வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News