சினிமா துறையில் கமலஹாசனை உலகநாயகன் என புகழப்படுவது அவருக்குப் பொருத்தமானதுதான். ஏனென்றால் தொடக்கத்திலிருந்தே சினிமாவில் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்து நடிப்பில் ஜாம்பவானாக திகழும் கமலஹாசன் இதுவரை நடித்த படங்களில் சுமார் 8 படங்கள் V என்ற முதல் எழுத்தைக் கொண்ட உருவான கமலஹாசனின் வெற்றிப் படங்களாக பார்க்கப்படுகிறது. அதில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் விக்ரம் படமும் சேர்ந்திருக்கிறது
வறுமையின் நிறம் சிவப்பு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்திருக்கும் இந்தப் படம் V என்ற தலைப்பில் துவங்கப்பட்ட வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படமாகும். இந்தப்படம் புரட்சிகர சிந்தனை உள்ள வேலை இல்லாத பட்டதாரிகளின் வறுமையை கமல் தன்னுடைய நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய வெற்றிப் படமாகும்.
வாழ்வே மாயம்: 1982ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான V தலைப்பில் தொடங்கப்பட்ட இந்தப் படமும் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட திரைப்படம் ஆகும். காதலியுடன் சந்தோசமாக வாழ்க்கையை துவங்க நினைக்கும் போது எதிர்பாராதவிதமாக புற்றுநோய் ஏற்பட பாதியிலேயே தன்னுடைய வாழ்க்கை முடிந்து போவதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு, காதலியின் வாழ்க்கையில் சிதைத்து விடக்கூடாது என அவளை தன்னைவிட்டு நீங்கும்படி செய்யும் உயர்ந்த குணம் கொண்ட மனிதனாக கமலஹாசன் இந்த படத்தில் நடித்திருப்பார்.
விக்ரம்: 1986 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக கமலஹாசன் நடிப்பில் வெளியான V எழுத்தில் துவங்கப்பட்ட இந்த படமும் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய வெற்றிப்படம் ஆகும்.
வெற்றிவிழா: பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு கமலஹாசன், பிரபு, அமலா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்த V எழுத்தில் துவங்கிய இந்த படமும் கமலஹாசனின் வெற்றிப்படங்களில் லிஸ்டில் உள்ளது.
விருமாண்டி: படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு கமலஹாசனை முரட்டுக்காளை போல் காட்டப்பட்டிருக்கும் விருமாண்டி படத்தின் முதல் எழுத்தும் V என்பதால் இந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் ஜாதி அரசியல், மரண தண்டனை போன்றவை தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்தியது, இதில் கமலஹாசனுடன் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள்.
வசூல்ராஜா: அன்பு தான் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படமும் V என்ற முதல் எழுத்திலேயே தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் கமல்ஹாசனுடன் பிரபு, பிரகாஷ்ராஜ், சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள்.
வேட்டையாடு விளையாடு: காதல் காட்சிகள் பஞ்சமில்லாமல் கமலஹாசன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார். V எழுத்தில் துவங்கப்பட்ட இந்த படமும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக பார்க்கப்பட்டது.
விஸ்வரூபம்: கமலஹாசன் நடித்த தயாரித்த விஸ்வரூபம் இரண்டு பாகங்களாக உலகத் தரத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். இந்தப்படமும் கமலஹாசனின் வெற்றிப்படங்களில் V எழுத்தில் துவங்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்களில் 8 படங்கள் V என்ற முதல் எழுத்தை தழுவிய டைட்டில்கள் கொண்ட வெற்றி படங்கள்.இதில் தோல்வியையே காணாத V தலைப்பில் படங்களின் லிஸ்டில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இன்று திரையரங்கில் ரிலீஸ் ஆகியிருக்கும் விக்ரம் படமும் சேர்ந்திருக்கிறது.