புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அண்ணாச்சியை பிரபலமாக்கிய சூர்யாவின் வாடிவாசல்.. ஓவர் நைட்டில் வைரலான சம்பவம்

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தன்னுடைய கடையின் விளம்பரத்தில் நடித்து வந்த அண்ணாச்சி தற்போது ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ள தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் அண்ணாச்சியுடன் இணைந்து புதுமுக நடிகை ஊர்வசி, பிரபு, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாடிவாசல் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்தப் பாடலில் அண்ணாச்சி, நடிகை ராய் லட்சுமி உடன் இணைந்து குத்தாட்டம் போட்டு இருப்பார். கலர் கலராக உடை அணிந்து, பயங்கர மேக்கப் போட்டு அண்ணாச்சி ஆடியிருக்கும் இந்தப் பாடல் தற்போது அதிக பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ராய் லட்சுமியுடன் அண்ணாச்சியின் நடனம் எப்படி இருக்கும் என்பதை காணும் ஆவல் ரசிகர்களுக்கு ஒரு புறம் இருந்தாலும், அவரை கிண்டல் செய்வதற்காகவே இந்த பாடலை பலரும் விரும்பி பார்க்கின்றனர். இப்பாடல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு சூர்யாவின் ரசிகர்களும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளனர்.

எப்படி என்றால் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வந்தாலும் அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் சூர்யாவின் ரசிகர்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் வாடிவாசல் என்று வெளியான இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் சூர்யா பட அப்டேட்தான் என்று நினைத்து பாடல் வெளி வருவதற்கு முன்பே அந்த தகவலை டிரெண்ட் செய்து வந்தனர். இதுதான் இந்தப் பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

அதன் பிறகுதான் வாடிவாசல் பாடல் அதிகமாக வைரலானது. அந்த வகையில் தெரிந்தோ தெரியாமலோ சூர்யாவின் ரசிகர்கள் அண்ணாச்சிக்கு உதவி செய்துள்ளனர். இதனால் தி லெஜன்ட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

Trending News