புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வாடி வாசலுக்கு ஆப்பு வைக்கும் அஜித்.. சிக்னல் கொடுத்ததும் சிட்டாக பறந்த முதலாளி

Actor Ajith: கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் சூர்யா வீட்டு பிரச்சனை தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. பருத்தி வீரனில் ஆரம்பித்து இப்போது வாடிவாசல் வரை அந்த பிரச்சனை திசை திரும்பி இருக்கிறது. இதில் அஜித்தும் தன் பங்குக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.

தற்போது விடாமுயற்சியில் பிஸியாக இருக்கும் அஜித் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு படம் பண்ண இருக்கிறார். அதை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஆனால் முதலில் அப்படத்தை தயாரிக்க இருந்தது எல்ரெட் குமார் தான்.

ஆனால் அது கைநழுவி போன நிலையில் அவர் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார். உடனே அஜித் அவரை சமாதானப்படுத்தி நாம நிச்சயம் படம் பண்றோம். இயக்குனரையும் நீங்களே தேர்ந்தெடுங்கள். யாராக இருந்தாலும் எனக்கு ஓகே தான் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

Also read: அமீருக்கு அடிமேல் அடி கொடுத்த சிவக்குமார் குடும்பம்.. ஊரைவிட்டு ஓடிய இயக்குனர்

இந்த வார்த்தைக்காகவே காத்திருந்த தயாரிப்பாளரும் இப்போது சிக்னல் கிடைத்ததும் சிட்டாக பறந்து வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். அதன்படி அஜித்துடன் அடுத்ததாக கூட்டணி அமைக்க இருப்பது வெற்றிமாறன் தான். அந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஒன் லைன் கதையையும் அவர் அஜித்துக்கு சொல்லிவிட்டாராம்.

அது அவருக்கு பிடித்துப் போன நிலையில் இந்த கூட்டணி தற்போது உறுதியாகி இருக்கிறது. அதன்படி விடுதலை 2 வேலைகள் முடிந்ததும் இதை ஆரம்பிக்கும் முடிவில் தற்போது எல்ரெட் குமார் இருக்கிறார். அப்படி என்றால் வாடிவாசல் நிலை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. தற்போது அமீரின் பஞ்சாயத்து சூர்யா குடும்பத்துக்குள் பெரும் புயலை வீசிக் கொண்டிருக்கிறது.

அதேபோல் வெற்றிமாறன் அமீர் இப்படத்தில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆக மொத்தம் இந்த பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வரும் கேப்பில் அவர் அஜித்தை இயக்கி விட முடிவு செய்திருக்கிறார். அந்த வகையில் அஜித்தால் வாடி வாசலுக்கு இப்போது புது சிக்கல் முளைத்து இருக்கிறது.

Also read: எனக்கு ஆர்டர் போடற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க.. வெற்றிமாறனிடம் அசிங்கப்பட்ட சிங்கம்

Trending News