ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அசுரனில் விட்டதை வாடிவாசலில் பிடிச்சே ஆகணும்.. வெறிகொண்டு வேலைசெய்யும் பிரபலம்

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருபவர் கலைப்புலி எஸ் தாணு. இவர் தயாரிக்கும் படங்கள் அனைத்துமே ஏகப்பட்ட லாபங்களை அள்ளிக் கொடுத்து வருகின்றன.

அந்த வகையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் 100 கோடி வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரித்த கர்ணன் திரைப்படமும் தற்போது வரை நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

இதனையடுத்து சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்தை தயாரிக்க உள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டதாம்.

பெரும்பாலும் வெற்றிமாறன் படங்கள் என்றாலே இசையமைப்பாளராக இருப்பது ஜிவி பிரகாஷ் தான். அசுரன் படத்தில் கூட ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அவருக்கு ஏன் தேசியவிருது கிடைக்கவில்லை என்பது தற்போது வரை புரியாத புதிராகத்தான் உள்ளது.

gv-prakash-cinemapettai
gv-prakash-cinemapettai

இந்நிலையில் அசுரன் படத்தில் ஏமாற்றமடைந்த ஜிவி பிரகாஷ் அடுத்ததாக வாடிவாசல் படத்தில் எப்படியாவது ஒரு தேசிய விருதை வாங்கி விட வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறாராம்.

ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யவிருக்கும் ஜிவி பிரகாஷ் வாடிவாசல் படத்திற்கான இசை அமைக்கும் பணிகளை தற்போது தொடங்கிவிட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவர் அறிவித்ததிலிருந்தே தேசிய விருதுக்கு அடி போடுகிறார் என்பது தெரிய வருகிறது. இதனை சூர்யா ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

vaadivaasal-update-from-gv-prakash
vaadivaasal-update-from-gv-prakash

Trending News