வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வாடிவாசல் படத்திற்காக முரட்டுத்தனமாக தயாராகும் அமீர்.. மொட்டைத்தலை, முறுக்கு மீசையுடன் வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சமீப காலமாக படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமே சூரரைப்போற்று. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா, வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த படத்திற்கான போஸ்டர் கூட வெளியானது.

ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி சென்றுள்ளது. தற்போது சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருவதில் பிஸியாக இருப்பதால் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாடி வாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளனர். தற்போது படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அது என்னவென்றால் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் அமீர் நடிக்க உள்ளாராம். அமீர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முரட்டுத்தனமான கிராமத்து கதாபாத்திரத்திற்கு தயாராகும் அமீர். சூர்யாவுக்கு அண்ணனாக அல்லது உயிர் நண்பனாக நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் ஏற்கனவே சந்தனத்தேவன் என்ற படத்திற்காக எடுத்த போட்டோ ஷூட் என்ற குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

 

vaadi-vasal-ameer
vaadi-vasal-ameer

Trending News