சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

ரீ-ரிலீஸ் செய்து வசூலை வாரி குவித்த சூர்யாவின் வாரணம் ஆயிரம்.. களத்தில் தீயாய் நிற்கும் சுப்ரமணியபுரம்

Vaaranam Aayiram Re-release: சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சமீரா ரெட்டி, சிம்ரன் போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபகாலமாக முன்பு வெளியான படங்கள் ரீ-ரீலீஸ் செய்யப்படுகிறது.

அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனனின் வேட்டையாடு விளையாடு படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் வாரணம் ஆயிரம் படம் ஆந்திராவில் சூர்யா சன் ஆப் கிருஷ்ணா என்ற பெயரில் வெளியானது. இப்போது அங்கு 15 வருடம் கழித்து மீண்டும் இந்த படத்தை ரீ ரீலீஸ் செய்து உள்ளனர்.

Also Read:கங்குவா-விற்கு முன் சூப்பர் ஹிட் படத்தை வைத்து வசூலை அள்ளும் சூர்யா.. 500 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்

இதுவரை ஆந்திராவில் டப் செய்யப்பட்டு வெளியான படங்களில் ரீ ரிலீஸில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை சூர்யாவின் வாரணம் ஆயிரம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் 1.72 கோடி வசூல் செய்திருக்கிறது. முதல் நாளே புது படம் வெளியாவது போல் ரசிகர்கள் இந்த படத்திற்கு வரவேற்பு கொடுத்து தியேட்டரையே அலற விட்டனர்.

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் போல் சமீபத்தில் சுப்ரமணியபுரம் படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சசிகுமார் இயக்கத்தில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

Also Read:சூர்யாவிற்கு அப்பாவாக நடிக்கும் கேஜிஎப் வில்லன்.. ஆர்டிஸ்ட் செலக்ஷனிலேயே பகீர் காட்டும் கங்குவா

அதுவும் ஜெய்யின் சினிமா கேரியரில் இப்படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்திருந்தது. இந்நிலையில் சுப்ரமணியபுரம் படம் ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அப்போதே நல்ல வசூலை சுப்ரமணியபுரம் படம் பெற்று தந்தது.

அந்த வகையில் இப்போது 0.18 கோடி முதல் வசூல் செய்திருக்கிறது. இதுவும் படத்திற்கு லாபமாக தான் அமைந்திருக்கிறது. ஆகையால் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் முன்பு வெளியான பெரிய நடிகர்களின் படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் நிறைய படங்கள் மீண்டும் வெளியாகி நல்ல லாபத்தை பெற்று வருகிறது.

Also Read:சுயநலமாக நடந்து கொண்ட சிவகார்த்திகேயன், சூர்யா.. திறமையால் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த விஜய்

Trending News