செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு அட்வான்ஸ் புக்கிங் எண்ணிக்கையில் பாதி கூட தாண்டாத துணிவு.. உதயநிதிக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி

கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை இருபெரும் துருவங்கள் என்றால் அது நடிகர் விஜய் மற்றும் அஜித் தான். இவர்களுடைய ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே கதிகலங்க வைக்கும் நிகழ்வாக, கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு இந்த இரண்டு ஜாம்பவான்களின் படங்களும் ஒரே நாளில் மோதவிருக்கிறது.

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த ரேஸில் இருவருமே ஜெயித்தே ஆக வேண்டும் என்ற உச்சகட்ட கட்டாயத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே’ மற்றும் துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘சில்லா சில்லா’ முதன்முதலாக களத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது.

Also Read: வாரிசு ஹீரோ முதலில் விஜய் இல்லையாம்.. வாயை விட்டு வம்படியாக மாட்டிக் கொண்ட தில் ராஜு

இந்நிலையில் இப்போது வெளிநாடுகளில் வாரிசு மற்றும் துணிவு படத்தின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த இரண்டு படங்களும் வரும் ஜனவரி 11ஆம் தேதி ஓவர்சீஸ் நாடுகளில் மோதுகின்றன. இதற்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது. லண்டனில் முன்பதிவு தொடங்கிய கொஞ்ச நேரத்தில் வாரிசு 1300 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து ஹவுஸ்புல் ஆகிவிட்டதாம்.

ஆனால் அஜித்தின் துணிவு படம் அந்த எண்ணிக்கையில் பாதியை கூட தாண்டவில்லையாம். வெறும் 400 டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. வெளிநாட்டிலேயே இந்த நிலைமை என்றால் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் விற்பனை எப்படியிருக்கும் என்றும் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. இப்போது உதயநிதி பெரிய நெருக்கடியில் உள்ளார் என்றே சொல்லலாம்.

Also Read: சிம்பு மீது காண்டான அஜித், தனுஷை வைத்து போடும் பக்கா பிளான்.. விஜய்யின் வாரிசு படத்தால் வந்த வம்பு

துணிவு படத்தை உதயநிதி வாங்கியதில் இருந்தே பயங்கர பரபரப்பு பற்றிக் கொண்டது. உதயநிதி தன்னுடைய அரசியல் பின்புலத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எல்லா தியேட்டர்களையும் துணிவு படத்துக்காக வளைத்து போட்டு கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது வெளிநாட்டு விற்பனையை கருத்தில் கொண்டு உதயநிதி கொஞ்சம் யோசித்தே முடிவெடுக்க வேண்டும்.

தளபதி விஜய்யை பொறுத்தமட்டிலும் கோலிவுட்டின் வசூல் வேட்டை நாயகனாக இருந்து வருகிறார். மேலும் இவருடைய படங்கள் ரிலீசுக்கு முன்பு அதிக பிரச்சனையை சந்தித்தால் அமோக வெற்றி தான் என்ற சென்டிமெண்ட் இருக்கிறது. வாரிசு பட ரிலீசுக்கும் தளபதி அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். எனவே இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

Also Read: ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க பதட்டத்தில் விஜய் செய்த காரியம்.. துணிவை ஜெயிச்சே ஆகனுமாம்

Trending News