ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சந்தானம் காட்டில் கொட்டும் பணமழை.. வடக்குப்பட்டி ராமசாமி 3 நாள் வசூல் ரிப்போர்ட்

Vadakkupatti Ramasamy collection: ஹீரோவாக மாறிய பிறகு சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் கடந்த வருடம் வெளியான டிடி ரிட்டன்ஸ் அவருக்கு சாதகமாக இருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள வடக்குப்பட்டி ராமசாமியும் நல்ல ஓப்பனிங்கை பெற்றிருக்கிறது.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கும் இப்படம் குடும்ப ஆடியன்ஸை பெருமளவில் கவர்ந்துள்ளது.

ஏற்கனவே ட்ரைலரின் மூலம் ஒரு சில சர்ச்சைகள் படத்திற்கு எதிராக வெடித்தது. ஆனால் அதுவே ப்ரமோஷன் ஆக மாறி படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதன்படி 600 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு முதல் நாளிலேயே தியேட்டர்களில் நல்ல கூட்டம் இருந்தது.

Also read: Vadakkupatti Ramasamy Movie Review- மூடநம்பிக்கையை வைத்து விபூதி அடிக்கும் சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி எப்படி இருக்கு.? விமர்சனம்

அதை தொடர்ந்து வார இறுதி நாட்கள் ஆன சனி, ஞாயிறு வடக்குப்பட்டி ராமசாமி நல்ல கலெக்ஷனை பார்த்து இருக்கிறது. அந்த வகையில் முதல் நாளில் 80 லட்சம் வரை வசூலித்த இப்படம் இரண்டாவது நாளில் 1.15 கோடி வரை லாபம் பார்த்திருக்கிறது.

அடுத்ததாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தை பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. அதன்படி இரண்டு நாட்களை விட மூன்றாவது நாளில் இப்படம் அதிகபட்சமாக 1.35 கோடி வசூலித்திருக்கிறது.

ஆக மொத்தம் மூன்று நாட்களில் மட்டுமே வடக்குப்பட்டி ராமசாமி 3.30 கோடி கலெக்ஷனை பார்த்து இருக்கிறது. இந்த வசூல் இனிவரும் நாட்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது சந்தானம் உட்பட படகுழுவினர் அனைவரும் ஏக குஷியில் இருக்கிறார்களாம்.

Also read: வடக்குப்பட்டி ராமசாமி கல்லா கட்டினாரா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Trending News