புதன்கிழமை, ஜனவரி 15, 2025

23 வயசு வித்தியாசம், மகள்னு சொல்லிட்டு கல்யாணம் பண்ணிய டஃப் இயக்குனர்.. அதிர்ந்து போன வடிவுக்கரசி

Vadivukkarasi: வடிவுக்கரசி மிகவும் துணிச்சலான நடிகை. யாராக இருந்தாலும் நேரடியாக முகத்திற்கு நேராக வெளிப்படையாக சொல்லக்கூடியவர். வெள்ளித்திரையில் பல அற்புத கதாபாத்திரங்களை கொடுத்துள்ள இவர் சின்னத்திரையிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

இந்த சூழலில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வடிவுக்கரசி டாப் இயக்குனர் ஒருவர் மகள் என்று சொல்லிவிட்டு அவரை கல்யாணம் செய்து கொண்ட விஷயத்தை போட்டு உடைத்து இருந்தார். தனக்கு அந்த விஷயம் மிகவும் வேதனை அளித்ததாகவும் கூறியிருந்தார்.

அதாவது ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் தான் பாலு மகேந்திரா. இவர் சினிமாவில் பல உயரத்தை சந்தித்தாலும் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதிலும் அவரது திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வெடித்தது.

பிரபல இயக்குனரின் கல்யாணத்தை பற்றி பேசிய வடிவுக்கரசி

அந்த வகையில் பசி படத்திற்காக தேசிய விருது வாங்கிய ஷோபாவை திருமணம் செய்து கொண்டார். ஷோபா மற்றும் வடிவுக்கரசி இருவருமே நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். அதுவும் ஏணிப்படிகள் படத்தில் நடிக்கும் போது தான் இருவரும் மிகுந்த நெருக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் பசி படத்திற்காக தேசிய விருது ஷோபாவுக்கு அறிவிக்கப்பட்ட போது வடிவுக்கரசி வாழ்த்து சொல்வதற்காக வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போதுதான் ஷோபா மற்றும் பாலு மகேந்திரா திருமணம் செய்து கொண்ட செய்தி தெரிய வந்துள்ளது.

ஆனால் தனது திருமணத்தைப் பற்றி ஷோபா எதுவுமே வடிவுக்கரசியிடம் கூறவில்லையாம். மேலும் ஒருமுறை பாலு மகேந்திரா இலங்கைக்கு சென்று திரும்பும் போது கிப்ட் ஒன்றை சோபாவுக்கு கொடுத்தார். அதில் என் அன்பு மகளே என்று குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு மகள் மாதிரி பழகிவிட்டு அவரையே திருமணம் செய்து கொண்டது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்ததாக வடிவுக்கரசி அந்த பேட்டியில் கூறினார். ஏற்கனவே இதே போல் தான் சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ் சோபாவின் வாழ்க்கையை பாலு மகேந்திரா அழித்துவிட்டார் என்று பேட்டியில் கூறியிருந்தார்.

துணிச்சல் மிகுந்த வடிவுக்கரசி

Trending News