வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாடிவாசலுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனை.. சூர்யாவுக்கு கட்டம் சரியில்லையோ

Actor Surya In Vaadivasal: சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் பத்து மொழிகளில் தயாரிக்கப்பட்டு பான் இந்தியா படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளிவந்த நிலையில் இவருடைய ரசிகர்கள் குஷியுடன் இருக்கிறார்கள்.

ஆனால் இதற்கு முன்னதாகவே கமிட்டாயிருந்த வாடிவாசல் படம் அப்படியே கிணத்தில் போட்ட கல்லாக இருப்பதால் சூர்யா மற்றும் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பதாக அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.

Also read: கங்குவா படத்தில் சூர்யாவை மிரட்ட வரும் கேஜிஎஃப் நடிகர்.. சரியாக தூண்டில் போட்ட சிறுத்தை சிவா

ஆனால் இப்படம் ஆரம்பித்ததில் இருந்தே ஏதாவது ஒரு காரணத்தினால் தடை பெற்று கொண்டிருக்கிறது. முதலில் இப்படத்திற்கு முக்கியமாக காளை மாடு தேவைப்படுவதால், அதற்கான சரியான பயிற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

அதன் பின் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிசியாக இருப்பதால் இது தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் மறுபடியும் இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளராக கமிட்டாய் இருந்த ஜிவி பிரகாஷ் விலக இருக்கிறார்.

Also read: விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா.. சைலண்டாக நடந்த மீட்டிங்

அதற்கு காரணம் இந்த படம் இன்னும் இழுவையிலேயே இருப்பதால் இதை நம்பி இருந்தால் பிரயோஜனம் இல்லை என்று அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். இந்த நிலைமையில் போய்க் கொண்டிருந்தால் வாடிவாசல் படம் வருமா வராதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழும்புகிறது.

ஏனென்றால் ஆரம்பித்த நாளிலிருந்து வாடிவாசலுக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே சூர்யா கமிட்டான வணங்கான் படம் அப்படியே கைநழுவி போய்விட்டது. தற்போது வாடிவாசல் படமும் திராட்டில் தொங்கிக் கொண்டிருப்பதால் சூர்யா படாத பாடுபட்டு வருகிறார்.

Also read: பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

Trending News