புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நெல்சனுடன் இணைய மறுக்கும் வடிவேலு.. விஜய்சேதுபதி இயக்குனருக்கு முக்கியத்துவம்

சினிமாவை பொறுத்தவரை யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களை வைத்து எப்படியாவது ஒரு கதையைக் கட்டி விடுவது வழக்கம் தான். அப்படிதான் தற்போது வடிவேலு இரண்டு இயக்குனர்கள் படங்களில் நடிப்பதாக ஒரு வதந்தியை பரப்பியுள்ளனர்.

தற்போது வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதனால் தற்போது பல இயக்குனர்களும் வடிவேலுவிடம் தங்களது படங்களில் நடிக்குமாறு கூறி வருகின்றனர். ஆனால் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் கதையில் பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை என்றாலும் காமெடியில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதனால் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் நன்றாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

vadivelu
vadivelu

ஆனால் வடிவேலு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பதை விட நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு காரணம் நலன் குமாரசாமி படங்கள் அனைத்திலுமே காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதனால் நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு நடித்த படம் சிறப்பாக இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.

வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பார்த்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள் என கூறி வருகின்றனர். ஆனால் பல இயக்குனர்களும் தங்கள் படங்களில் நடிப்பதற்கு வடிவேலுவிடம் வாய்ப்பு கேட்டு வருவதால் கூடிய விரைவில் அனைத்து இயக்குனர்களின் படங்களில் நடிப்பார் என கூறி வருகின்றனர்.

Trending News