வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வடிவேலு தூக்கிவிட்ட 4 நடிகைகள்.. இப்பவும் டாப்ல இருக்க அவர் தான் காரணமாம்

கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் 1991 ம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் வடிவேல். இப்படத்தை தொடர்ந்து வடிவேலு சின்ன கவுண்டர், சிங்காரவேலன், தேவர் மகன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர வடிவேலு மிகவும் பிஸியாக இருந்தார். செந்தில், கவுண்டமணியை பின்னுக்கு தள்ளி வடிவேலுக்கு அதிக பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

வடிவேலின் கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் தவித்தனர். அப்போது உச்சத்தில் இருந்த வடிவேலு பல நடிகைகளுக்கு சிபாரிசு செய்துள்ளார். சின்னத்திரையில் நடித்த நடிகை ஷோபாவை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தவர் நடிகர் வடிவேலு.

இவர் வடிவேலுடன் சில்லுனு ஒரு காதல், சுறா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் சந்திரமுகி படத்தில் ஸவர்ணா மேத்யூஸ் நடிக்க வடிவேலு தான் சிபாரிசு செய்துள்ளாராம். இதற்கு முன்பு ஸவர்ணா தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் சந்திரமுகி படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தவர் நடிகை சோனா. இவர் பெரும்பாலான படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார். குசேலன் படத்தில் சோனா நடிக்க வேண்டும் என வடிவேலு சொல்லியிருந்தார். வடிவேலின் வேண்டுகோளுக்கிணங்க அந்தப்படத்தில் சோனா நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகைகளுக்கு மட்டும் அல்லாமல் 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, அம்பிகா போன்ற நடிகைகளுக்கு நிறைய படங்களில் வடிவேலு சிபாரிசு செய்துள்ளார். அப்போது வடிவேலுக்கு வலை விரித்த நடிகைகளும் உள்ளார்கள். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

இப்போது தடைக்காலம் முடிந்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் உடன் வடிவேலு நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார்.

Trending News