வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

முத்த காட்சியில் நடித்துள்ள வடிவேலு.. அதைப் பற்றி மனம் திறந்த நடிகை

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவருடைய தனித்துவமான காமெடியால் கவுண்டமணி, செந்தில் உள்ளபோதே இவருக்கென்று தனி ரசிகர்கள் வரத் தொடங்கினார்கள். வடிவேலு உருவாக்கிய காமெடி வைத்துதான் இன்றும் மீம்ஸ்கள் வருகிறது.

வடிவேலு அன்று முதல், இன்றுள்ள 2k கிட்ஸ் வரை, எல்லோருக்கும் பேவரிட் காமெடி நடிகராக உள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் ஒல்லியாக கருப்பாக இருந்து தனது ரசிகர்களை தன்னுடைய நகைச்சுவையால் சிரிக்க வைத்திருந்தார். வடிவேலு படங்களில், காமெடி ரோல்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் சமீபகாலமாக கதாநாயகானாக நடிக்க தொடங்கினார்.

இவர் கதாநாயகனாக 23ஆம் புலிக்கேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். வடிவேலு ஒரு சில காரணங்களால் சில ஆண்டுகள் படங்களில் நடிக்க முடியாமல் விலகி இருந்தார். இந்நிலையில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா, விஜயுடன் மெர்சல் போன்ற படங்களில் நடித்தார்.

vadivelu-cinemapettai
vadivelu-cinemapettai

தற்போது வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே பல இயக்குனர்கள் வடிவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், வடிவேலு நீ எந்தன் வானம் படத்தில் கவர்ச்சி நடிகையுடன் குத்தாட்டம் போட்ட போது உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.

முன்னணி நடிகர்களுக்கு, லிப் கிஸ் கொடுக்கவே நடிகைகள் தயங்கும் நிலையில் ஒரு காமெடி நடிகருடன் ரொமான்டிக் பாடலுக்கு நடனமாட ஒத்துக் கொண்டது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இதைப்பற்றி அந்த நடிகையிடம் கேட்கும்பொழுது, வடிவேலுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் முத்தம் கொடுத்ததை நான் தவராக நினைக்கவில்லை, அப்படத்தின் மூலம் நான் பிரபலமானேன் என்று கூறியுள்ளார்.

Trending News