வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இனி அந்த மனுசனோட சவகாசம் வேண்டாம்.. வடிவேலுவை புரட்டி எடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் 10 ஆண்டுகளாக வடிவேலு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

சமீபத்தில் லைக்கா  தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில்  நாய் சேகர் எனும் தலைப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக வெளிப்படையாகக் கூறினர் அந்த பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்ப அதற்கும் நகைச்சுவையோடு பல்வேறு விதமான பதில்களை கூறினார்.

மேடையில் பேசிய வடிவேலு இந்த பத்து வருட காலத்தில் பல துன்பங்களை நான் பார்த்துவிட்டேன். இனிமேல் படத்தில் கவனம் செலுத்தி இருக்க முடிவு செய்துள்ளேன் எனவும் கூறினார் மேலும் நோயாளி ஒருவர் மருத்துவரிடம் சென்று எனக்கு தூக்கமே வரவில்லை என கூறியுள்ளார்.

அதற்கு மருத்துவர் பக்கத்திலிருக்கும் சர்க்கஸ் போய் பாருங்கள் நகைச்சுவையோடு இருக்கும் நன்றாக தூக்கம் வரும் என கூறியுள்ளார். அதற்கு நோயாளி அதில் பபூன் வேஷம் போடுவதே  நான் தான் என பதிலளித்துள்ளார். அப்படி போல் தான் என் வாழ்க்கையும் இருந்தது என கூறியுள்ளார்.

பலரையும் சிரிக்கவைத்த எனக்கும் பல்வேறு துன்பங்கள்  இத்தனை வருடங்களாக வந்துள்ளன ஆனால் இதனை மறந்து இனி படங்களில் கவனம் செலுத்தி மக்கள் சிரிப்பை வைத்து மட்டுமே என்னுடைய வேலை எனவும் தெரிவித்துள்ளார்.

vadivelu-cinemapettai-01
vadivelu-cinemapettai-01

மேலும் என் மேல் வைக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய் எனவும் எனக்கு ரெக்கார்டு எதுவும் போடப்படவில்லை எனவும் தெரிவித்தார் இனிமேல் ஷங்கருடன் எந்த பழக்கம் வைத்துக்கொள்ள மாட்டேன் இனி வரலாற்று படங்களில் நடிப்பதை விட மக்களுக்கு பிடித்த காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News