மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கும் படம் மாமனிதன். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருதுபெற்றது. மாமனிதன் 2018 இன் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 2019 இல் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது, இன்னும் திரைப்படம் வெளிவரவில்லை.
இத்திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் சேர்ந்தே இசையமைத்துள்ளனர். மாமனிதன் திரைப்படம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன.
பல பிரச்சினைகளால் இன்னும் திரைப்படம் வெளிவராமல் உள்ளது. அதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் யுவன் அதற்கான வேலையில் தீவிரம் காட்டுகிறார். மாமனிதன் படத்தின் கதையை சீனு ராமசாமி முதலில் வடிவேல் இடம் கூறும்பொழுது என்னை வாழ்த்தி மேட்டர் ஹெவியா இருக்கே என்றார்.

பின்பு, பிரபுதேவா கதையைக் கேட்டு கண்கலங்கினார். மம்முட்டி இசைந்தார். ஆனால், ஈடேறவில்லை. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விரைவில் மிக அருகில் நல்ல தேதியை கூறினார். பின்பு இப்படம் ஓராண்டுக்குள் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது.