சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காமெடியனுக்கெல்லாம் அவ்வளவு கொடுக்க முடியாது.. மாமன்னனாகவே நினைத்து வடிவேலு கேட்கும் சம்பளம்

Actor Vadivelu: வடிவேலு ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க முடியாத சூழ்நிலை இருந்த நிலையில் இப்போது ரெட் கார்டு தடை நீங்கிய பிறகு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் விரைவில் சந்திரமுகி 2 படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் வடிவேலு நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி நடித்தாலும் படத்திற்கு வலு சேர்த்தது வடிவேலுவின் கதாபாத்திரம் தான்.

Also Read : 52 வயதில் உடன்பிறந்த தம்பி மரணம்.. கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் உதவாத வடிவேலு

இதுவரை இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்காத வடிவேலு மாமன்னன் மூலம் மொத்த பெயரையும் தட்டி சென்றார். அந்த வகையில் வடிவேலுக்கு இப்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோடிகளில் சம்பளம் கேட்டு வருகிறாராம் வடிவேலு.

உண்மையாகவே மாமன்னனாக நினைத்துக் கொண்டு வடிவேலு கேட்கும் சம்பளத்தை பார்த்தால் தலையை சுற்றுவதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 5 கோடி வரை வடிவேலு சம்பளம் கேட்கிறாராம். சில தயாரிப்பாளர்கள் காமெடியனுக்கு எல்லாம் அவ்வளவு கொடுக்க முடியாது என கராக்காட்டி வருகிறார்கள்.

Also Read : வடிவேலு கமலுடன் சேர்ந்து நடித்த மூன்றே படங்கள்.. இசக்கி ஆக உலக நாயகனைக் கவர்ந்த கதாபாத்திரம்

ஆனால் வடிவேலு நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று நின்று வருகிறாராம். மேலும் ஒரு காலகட்டத்தில் வடிவேலுக்கு மார்க்கெட் எப்படி உச்சத்தில் இருந்ததோ அதேபோல் தற்போது இருக்கிறது. சில தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து வடிவேலு கேட்ட சம்பளத்தை கொடுத்து புக் செய்கிறார்களாம்.

அதுமட்டும்இன்றி சந்திரமுகி 2 படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் கண்டிப்பாக ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்படும் என்று நம்பப்படுகிறது. ஆகையால் இந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு வடிவேலு செகண்ட் இன்னிங்ஸில் சக்கை போடு போட்டு வருகிறார்.

Also Read : வடிவேலு செய்த துரோகத்தால் மோசம் போன 5 நடிகர்கள்.. சொந்த பங்காளிக்கே ஏற்பட்ட பரிதாப நிலை

Trending News