வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சந்திரமுகி படத்தில் கறாராக பேசிய வடிவேலு.. வழியின்றி ஒப்புக்கொண்ட பி.வாசு

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் பல பிரச்சனைகளால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். இப்பொழுது பிரச்சனைகள் முடிந்த பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது தான் இந்த படக்குழு கதாபாத்திரங்களை தேர்வு செய்ய லண்டன் சென்று வந்தது.

ஒரு காலத்தில் வடிவேலுவின் காமெடி காமெடிகளுக்ககவே நிறைய படங்கள் வெற்றி பெற்றது. அந்த காலகட்டத்தில் வடிவேலு ரொம்பவும் அதிகாரத் தோரணையோடு நடந்து கொண்டதாக பேசப்படுகிறது. அவர் நினைத்ததை தான் படத்தில் வைக்க வேண்டும் என்றும், அவர் கூறிய நடிகைகளுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் சந்திரமுகி படத்திற்காக டைரக்டர் பி வாசுவிடம், வடிவேலு தகராறு செய்துள்ளார். அந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக சுவர்ணா மேத்யூஸ் என்ற நடிகையை தான் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென கறாராக பேசியுள்ளார்.

Swarna-
Swarna-

அந்த படத்திற்கு ஏற்கனவே அந்த கேரக்டரில் நடிக்க வேறு ஒரு நடிகையை புக் செய்து இருந்தார் வாசு. ஆனால் வடிவேல் இவ்வாறு நடந்து கொண்டதால் வேறு வழியின்றி சுவர்ணாவையே அந்தப் படத்திற்கு வடிவேலின் மனைவியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

Trending News