திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ரீ என்ட்ரி கொடுத்தவுடனே ஏழரையை போட்ட வடிவேலு.. தயாரிப்பாளரை மிரட்டிய சம்பவம்

வடிவேலு எப்போ திரும்ப வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சினிமாவில் இருக்கும் சிலரோ இவர் ஏன் திரும்ப வந்தார் எனும் அளவுக்கு மீண்டும் ஒரு வேலையைச் செய்துள்ளதாக வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய வீடியோவில் தெரிவித்துள்ளது தற்போது செம வைரல் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் நடிகர்களில் ஒருவர் வடிவேலு. என்றும் இவருக்கு மாற்று இல்லை. கடந்த 4 வருட காலமாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் அதே சமயத்தில் நடிக்கப் போன படங்களில் பஞ்சாயத்துக்கள் என அவரது கேரியர் தடுமாறியது.

தற்போது ஒரு வழியாக எல்லா பிரச்சனையும் முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த உடனேயே ஒரு புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளார் வடிவேலு. சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரை போன் போட்டு மிரட்டிய சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.

வடிவேலு அடுத்ததாக தொடர்ந்து இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அதில் ஒன்றுதான் காமெடி படங்களுக்கு பெயர் போன சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர். தலைநகரம் படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதால் அதே தலைப்பை இந்த படத்திற்கும் வைத்துள்ளனர்.

ஆனால் அதற்கு முன்பே காமெடி நடிகர் சதீஷ் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் படத்திற்கும் நாய் சேகர் டைட்டிலைத்தான் வைத்துள்ளார்களாம். அந்த படத்தை விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த தலைப்பை முறைப்படி பதிவு செய்து வாங்கிவிட்டதாம்.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாகவே வடிவேலுவின் அடுத்த படம் நாய் சேகர் என்பது தான் என பலருக்கும் தெரிந்த நிலையில் திடீரென அந்த தலைப்பு கைவிட்டுப் போனது வடிவேலுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு போன் செய்து நாய் சேகர் டைட்டிலை தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

ஆனால் அவர்களோ எங்களுடைய படத்திற்கு சரியான டைட்டில் இதுதான் எனக் கூற, கொஞ்ச நேரம் நார்மலாக பேசிக்கொண்டிருந்த வடிவேலு திடீரென கோபத்தின் உச்சிக்கு ஏறி ஒரு வாரத்திற்குள் நாய் சேகர் பட டைட்டிலை விட்டுக் கொடுக்கவில்லை என்றால் பத்திரிக்கையாளர்களை கூப்பிட்ட அடுத்த படம் நாய் சேகர் தான் என அறிவித்து விடுவேன் என எச்சரித்துள்ளாராம்.

naai-sekar-vadivelu
naai-sekar-vadivelu

Trending News