தமிழ் சினிமாவில் காமெடி மூலம் ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் வடிவேல். இவரது நடிப்பில் வெளியான அனைத்து காமெடி காட்சிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சினிமாவில் காமெடி மூலம் கலக்கி வந்த வடிவேலு அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டார். ஆனால் ரசிகர்கள் வடிவேலுவின் காமெடியை எதிர்பார்க்க மீண்டும் காமெடி களத்தில் குதித்தார்.
இவ்வளவு ஏன் சமூக வலைதளத்தை ஆட்டி படிக்கக்கூடிய மீம்ஸ் கிரியேட்ருளுக்கு இவர்தான் குரு ஏனென்றால் இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகளை வைத்து தான் 80% மீம்ஸ் உருவாகி வருகின்றன.
சினிமாவில் வெற்றிப்பாதையில் இருந்த வடிவேலு அதன் பிறகு ஒரு சில குளறுபடிகளால் அப்படியே சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி உள்ளார். அதாவது எப்படி சினிமாவில் வடிவேலு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தாரோ, அதேபோல் அப்போது விஜயகாந்த் அவரது கட்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதற்கு காரணம் அப்போது இரண்டு கட்சிகளுக்கு மேல் மக்கள் பெருமளவில் கோபத்தில் இருந்ததால், களத்தில் இறங்கி விஜயகாந்திற்கு ஒரு தரப்பினர் பயங்கரமாக ஆதரவு கொடுத்து வந்தனர்.
அதைக் கெடுப்பதற்காகவே சினிமாவில் முக்கியமான இடத்தில் இருந்த வடிவேலுவை வைத்து மேடைகளில் விஜயகாந்தை பற்றி அவதூராக பேச வைத்துள்ளனர். அதற்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர் என்று நடிகர் தியாகு சமீபத்தில்அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
ஆனால் அப்போது விஜயகாந்திற்கு ஏராளமான ஆதரவாளர்கள் இருந்ததால் வடிவேலுவை சரமாரியாக ரசிகர்கள் தாக்கினர். அதுமட்டுமில்லாமல் வடிவேலு படத்துக்கு செருப்பு மாலை கூட அணிவித்தனர்.
சினிமா வாழ்க்கையில் வடிவேலுக்கு பல நடிகர்கள் எப்படி வாய்ப்பு கொடுத்து உதவினார்கள் அப்படி ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் அவரது படங்களில் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்து உதவினார் என்பது அனைவருக்கும் தெரியும்.