செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வாய்ப்பு கிடைத்ததால் பழசை மறந்த வடிவேலு.. வீடு தேடி சென்ற இருவருக்கு கிடைத்த அல்வா

ரஜினி, கமல், அஜித், விஜய் என வடிவேலு நடிக்காத நடிகரின் படங்களை இல்லை என்னும் அளவிற்கு அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார். இருந்தாலும் சோதனையும் வேதனையும் வடிவேலுவை சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த நடிகர் வடிவேலுவின் திரைப்பயணத்தில் திடீரென பிரச்சனை வெடித்தது.

தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதித்தது. சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு சமீபத்தில் அந்த பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்தார். தயாரிப்பாளர் சங்கமும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வடிவேலு மீதான தடையை நீக்கியது.

அதன் பின்னர் தற்போது வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதுதவிர லைகா நிறுவனத்திற்கு மட்டும் தொடர்ச்சியாக ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இதனால் வடிவேலு இஸ் பேக் என மிகவும் மகிழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

இந்நிலையில் வடிவேலு மீண்டும் நடிக்க வந்ததால் அவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றிய போண்டாமணி மற்றும் வெங்கல்ராவ் உள்ளிட்ட இன்னும் சில நடிகர்கள் வடிவேலுவை சந்திக்க நேரில் சென்றுள்ளனர். ஆனால் வடிவேலுவோ சந்திக்க நேரமும் இல்லை மனமும் இல்லை என கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டாராம். பழசை மறந்து உடன் நடித்த நடிகர்களை அவமதித்த வடிவேலுவை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

ஆனா அவரோட பிரச்சனை அவருக்குத்தான் தெரியும். இப்பத்தான் மனுஷன் கோர்ட் கேஸ்னு அலைந்து நிம்மதியா இருக்கார். அது தெரியாமல் நெட்டிசன்களும் சுற்றி இருப்பவர்களும் அவரை தவறாக சொல்வதாகவும் கூறுகிறார்கள்.

Trending News