சக நடிகரை தற்கொலைக்குத் தூண்டிய வடிவேலு.. நாளுக்கு நாள் எகிறும் மாமன்னனின் க்ரைம் லிஸ்ட்

Actor Vadivelu: தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக இருக்கும் வடிவேலு திரையில் நம்மை கவலைகளை மறந்து சிரிக்க வைத்தாலும் நிஜத்தில் அவருடைய முகமே வேறு. இந்த மனுஷனுக்குள் இப்படி ஒரு கொடூர குணமா என்று பலரும் நினைக்கும் அளவுக்கு தான் பல செய்திகள் நம் காதுக்கு வருகிறது.

அதிலும் சமீப காலமாக இவருடன் நடித்த நடிகர்களே இவருடைய அருமை பெருமைகளை புட்டு புட்டு வைக்கின்றனர். அதிலும் தன்னை நம்பியவர்கள் கஷ்டம் என்று வந்தால் கூட உதவி செய்யாதவர் தான் இந்த வடிவேலு என்பதை பல நடிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றனர்.

Also read: தியேட்டரில் டபுள் மடங்கு லாபம் பார்த்த மாமன்னன்.. வசூலுக்கு எண்டு கார்ட் போட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்த உதயநிதி

அந்த வகையில் காதல் படத்தின் மூலம் பிரபலமான சுகுமார், வடிவேலு பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது இவர் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சில மேடைகளிலும், படங்களிலும் வடிவேலுவை போல் நடித்து இருக்கிறார். இதனால் காண்டான வைகைப்புயல் இவரை வரவழைத்து அது குறித்து பேசி இருக்கிறார்.

அப்போது நடந்த பேச்சு வார்த்தையில் வடிவேலுவுடன் இருந்தவர்கள் எங்க அண்ணனையே எதுக்கு பேசுறியா என சுகுமாரை கீழே தள்ளி அடித்து இருக்கின்றனர். உடனே அவர் இனிமேல் உங்கள மாதிரி நடிக்க மாட்டேன் நான் ஊருக்கே போறேன் என்ன விட்டுடுங்க என்று தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்திருக்கிறார்.

Also read: மாமன்னன் பட ஹீரோ உதயநிதியா, பகத் பாசிலா.? பாவம் மாரி செல்வராஜே கன்பியூஸ் ஆயிட்டாரு

இந்த விஷயத்தை தற்போது கூறியிருக்கும் சுகுமார் இந்த சம்பவத்தால் மிகவும் மனமுடைந்ததாகவும், தற்கொலை வரை சென்றதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சூழ்நிலையில் தன் மனைவி தான் இந்த தற்கொலை எண்ணத்தில் இருந்து தன்னை வெளியே கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை பிரேமப்ரியா வடிவேலு தனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தையும் பறித்து விட்டார் என ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதை தொடர்ந்து போண்டாமணி உள்ளிட்ட பல நடிகர்கள் இவர் பற்றி கூறியிருந்தனர். அந்த வகையில் சுகமார் கூறிய இந்த விஷயமும் வடிவேலுவின் மீது இருக்கும் கிரைம் லிஸ்ட்டை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மாமன்னன் நிஜத்தில் இப்படிப்பட்டவரா என பலரும் வடிவேலுவுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Also read: சக்திவேலா, ரத்னவேலா.? சாதிய வெறியை தூண்டிய மாரி செல்வராஜ், மாமன்னன் பற்ற வைத்த நெருப்பு