திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

வடிவேலுவை பத்தி பேசினாலே இனி கேசு தான்.. சைலண்டா சோலியை முடித்த மாமன்னன்

Vadivelu: லாங்குல பார்த்தா தான் காமெடியா இருப்பேன், பக்கத்துல பார்த்தா பயரா இருப்பேன்னு வடிவேலு ஒரு காமெடியில் சொல்வார். நிஜமாகவே அவர் அப்படித்தான் என நிரூபித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடியனாக ஆட்சி செய்து வந்தார் வடிவேலு.

பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் வடிவேலுவின் கால் சீட்டுக்காக காத்திருக்கும் நிலைமை கூட இருந்தது. திடீரென வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் எதுவுமே இல்லாமல் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முடங்கி இருந்தார்.

இந்த பத்து வருட காலம் அவர் படம் நடிக்கவில்லையே தவிர சமூக வலைத்தளங்கள் அவரை கொண்டாடி தீர்த்தன. தனக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதை நம்பி நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்தார்.

நாங்கள் ரசிச்சது நல்ல காமெடியை தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். வடிவேலு சினிமாவுக்குள் மீண்டும் மறு பிரவேசம் எடுத்த கையோடு அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

சைலண்டா சோலியை முடித்த மாமன்னன்

கூட இருப்பவர்களை வளர விடமாட்டார், பெண் நடிகைகளுக்கு தொந்தரவு கொடுத்தார், நடிகைகளுடன் தவறான உறவு இருந்தது என நிறைய பேர் அவருக்கு எதிராக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தனர். வடிவேலு இப்படிப்பட்டவரா என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு சலிப்பு ஏற்பட்டது.

அந்த மொத்த கரையையும் துடைத்து எடுத்தது மாரி செல்வராஜின் மாமன்னன் படம் தான். தொடர்ந்து வடிவேலுவுக்கு நல்ல நல்ல பட வாய்ப்புகள் வந்தது. தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் வடிவேலு அமைதியாக இருந்தது போல் தான் தெரிந்தது.

ஆனால் வடிவேலு இந்த பிரச்சனையை சட்டரீதியாக கையாண்டு இருக்கிறார். காமெடி நடிகர் வடிவேலுவை பற்றி அதிகமாக youtube சேனல்களில் பேட்டி கொடுத்தது நடிகர் சிங்கமுத்து தான். வடிவேலு சிங்கமுத்து மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்.

அந்த மனுவில் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறாக பேசுவதாகவும், அவர் தன்னை பற்றி பேசுவதற்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிங்கமுத்து வடிவேலுவை பற்றி பேச இடைக்கால தடை விதித்திருந்தார்கள்.

அதனை தொடர்ந்து மீண்டும் வடிவேலு இந்த வழக்கின் மீது மேலும் ஒரு மனுவை கொடுத்திருக்கிறார். அதில் சிங்கமுத்து இனி தன்னை பற்றி நிரந்தரமாக எந்த இடத்திலும் பேசக்கூடாது எனவும், இதற்கு முன்னால் அவர் பேசி தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு 5 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிங்கமுத்து தரப்பிலிருந்து விளக்கம் கேட்டிருக்கிறார்கள். இதேபோன்று வடிவேலுவை பற்றி பேசுபவர்கள் அத்தனை பேர் மீதும் வடிவேலு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

சித்திரவதை அனுபவிக்கும் வடிவேலு

Trending News