புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தோல்வி பயத்தால் மேடையில் உளறி வரும் வடிவேலு.. நாய் சேகர் ரிட்டன்ஸ் தோல்விக்கு இதுதான் காரணம்

வைகைப்புயல் வடிவேலு ரெக்கார்ட் தடை நீங்கி தற்போது படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்போது அவரது கைவசம் சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற பல படங்கள் உள்ளது. பழையபடி இப்போது முழு வீச்சாக சினிமாவில் வடிவேலு இறங்கி உள்ளார். இந்த நாள் அடுத்தடுத்த அவரது படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. சுராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் வெளியாகி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.

Also Read : டாப் 5 காமெடி நடிகர்கள் நடித்த மொத்த படங்கள்.. கவுண்டமணிக்கு பயங்கர டஃப் கொடுத்த வடிவேலு

இது குறித்த வடிவேலு மேடையில் பேசும்போது கஷ்டப்பட்டு ஒரு படத்தில் நடிக்கும் போது தேவை இல்லாமல் யூடியூப் சேனலில் படத்தைப் பற்றி மோசமாக விமர்சனம் செய்துள்ளனர். அதனால் தான் ரசிகர்கள் யூடியூப் விமர்சனத்தை பார்த்து விட்டு படத்தை பார்க்காமல் உள்ளனர்.

அதனால் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் தோல்வியை சந்தித்தது. கஷ்டப்பட்டு ரீ என்ட்ரி கொடுத்த படத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பாடுபட்டால் விமர்சனம் செய்து கெடுத்து விட்டார்கள். சினிமாவை அளிக்கும் தவறான விமர்சனத்தை புகார் அளித்த அனைவரையும் ஒடுக்க வேண்டும்.

Also Read : சினிமாவில் காமெடியன் நிஜ வாழ்க்கையில் வில்லனான வடிவேலு.. எவன் செத்தால் எனக்கென்ன.!

ஆகையால் படங்களை மோசமாக விமர்சிக்கும் யூடியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். இதை அறிந்த சிலர் படம் ஒழுங்கா எடுத்தா பார்க்க மாட்டோமா என வடிவேலுவை கிண்டல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி வடிவேலு ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனால் வடிவேலுவை இனிமேல் ஹீரோவாக நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளாராம். ஆகையால் தொடர்ந்து இனி காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே வைகைப்புயல் நடிக்க உள்ளார். இந்த முடிவுக்கு வடிவேலு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்று உள்ளனர்.

Also Read : இன்னும் பயிற்சி வேண்டுமோ, போதுமடா சாமி என்னை விட்ருங்க.. போதை தெளிந்த வடிவேலு

Trending News