செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வடிவேலு ஜோடிக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. மறுத்ததால் கேமராமேன் செய்த வேலை

சினிமாவில் வாய்ப்புக்காக சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வருவதாக சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு சினிமா பிரபலங்கள் பலர் மறுப்பு தெரிவித்தாலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அவ்வாறு இருக்கையில் சில நடிகைகள் அட்ஜஸ்மெண்டை மறுத்தால் அவர்களுக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கிறது என்பதை ஒரு நடிகை கூறியுள்ளார். சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வந்த இவர் வடிவேலுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

Also Read : வரலட்சுமி பூஜை செய்துவிட்டு வாங்கிய விவாகரத்து.. பிரிய முடியாமல் மீண்டும் சேர்ந்த ஜோடி

அதன் பின்பு பட வாய்ப்பு குறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். அதாவது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை தாரணி. இவர் பிரபு நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் என்ற படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி சில படங்களில் கவுண்டமணியுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தாரணி, தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை கூறி உள்ளார். அதாவது ஒரு படத்தில் நடிக்கும் போது இயக்குனர் மற்றும் கேமராமேன் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசினார்கள்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

அப்போது என்னை பற்றி வெளியில் எல்லோரிடமும் கேட்டுப் பாருங்கள். யாராவது என்னைப் பற்றி தப்பாக சொல்லி இருந்தால் அதன் பிறகு என்னிடம் வாருங்கள் என்று தாரணி தெளிவாக கூறியிருக்கிறார். அதன் பின்பு கேமராமேன் வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாராம். ஒரு நாள் கடுமையான வெயிலில் சூட்டிங் நடந்துள்ளது.

அப்போது சூடோடு இருந்த கேமராவை கேமராமேன் நேராக தாரணி முகத்தில் அடித்துள்ளார். இதனால் சூடு தாங்க முடியாமல் அவரது முகம் சிவந்து விட்டதாக தாரணி கூறியிருந்தார். இவ்வாறு அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது.

Also Read : வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி

Trending News