சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

8 வருஷம் சினிமாவையே வெறுக்க வைத்த வடிவேலு.. மேடையிலேயே கண்ணீர் விட்ட இயக்குனர்

Actor Vadivelu: சினிமா ஒருவரை எந்த அளவுக்கு ஏற்றி விடுகிறதோ அதே போன்று சறுக்கியும் விட்டுவிடும். அப்படி எட்டு ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகி இருந்த இயக்குனர் ஒருவர் கடந்த கால கஷ்டங்களை வெளிப்படையாக மேடையில் சொல்லி கண் கலங்கியது பலரையும் உருக வைத்துள்ளது.

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளிவந்த எலி என்ற படத்தை இயக்கியவர் தான் யுவராஜ் தயாளன். இதற்கு முன்னதாக அவர் போடா போடி, தெனாலிராமன் ஆகிய படங்களையும் இயக்கி இருந்தார். ஆனால் எலி அவருக்கு பெரும் சரிவை கொடுத்து விட்டது.

Also Read: வடிவேலு எவ்வளவு அடிச்சும் ஆலமரம் போல் வளர்ந்த நடிகர்.. வேறு வழியில் சென்று வெற்றிகண்ட பிரபலம்

எப்படி என்றால் அப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியின் போது இயக்குனரும் வடிவேலுவும் விமர்சனத்திற்காக காத்திருந்தார்களாம். ஆனால் படம் முடிந்து சில நிமிடங்கள் ஆன பிறகும் கூட அவர்கள் தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் வராமல் அமைதியே பதிலாக கிடைத்திருக்கிறது.

பொதுவாக ஒரு படம் நம்மை உணர்ச்சி பூர்வமாக கவர்ந்து விட்டாலோ அல்லது நல்லா இல்லை என்றாலோ தான் இது போன்ற மயான அமைதி இருக்கும். அதில் எலி இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்பதை இயக்குனர் படம் பார்த்தவர்களின் முகத்தை வைத்தே கணித்து விட்டாராம்.

Also Read: வயிறு குலுங்க சிரிக்க வைக்க டாப் 7 காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பளம்.. வடிவேலு முதல் யோகி பாபு வரை

அதைத் தொடர்ந்து வடிவேலுவுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது நடுவழியிலேயே இறங்கி கால் போன போக்கில் சென்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் படம் வெளியான ஒரு வருடம் கழித்தும் கூட அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வரவில்லையாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவையே வெறுத்து இருக்கிறார்.

தற்போது அந்த வேதனையிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இறுகப்பற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். அதன் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்த போது மேற்கண்ட விஷயங்களை கூறிய இயக்குனர் இந்த படத்திற்கு ஆதரவு அளிக்கும் படி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். அந்த வகையில் வடிவேலுவால் சினிமாவை வெறுத்த இவருக்கு இந்த படம் வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: நங்கூரம் போல் வடிவேலுக்கு மட்டுமே போட்ட ரெட் கார்டு.. அதைவிட மோசமாய் இருந்து எஸ்கேப் ஆன 2 நடிகர்கள்

Trending News