திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

வடிவேலு நடிக்க வேண்டிய படத்தில் நடித்த யோகி பாபு.. திமிரால் வாய்ப்பை இழந்த சோகம்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு. சமீபகாலமாக இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதற்கு காரணம் வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைதான் என சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் வடிவேலு சமீப காலமாக கொஞ்சம் மெத்தனதனமாகவும், யாரையும் மதிக்காமல் இருப்பது என தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் கோபம் அடைந்த பல இயக்குனர்கள் இவர் இல்லை என்றால் வேறு காமெடி நடிகர்களை கிடையாதா என கூறிவிட்டு வடிவேலுக்கு வாய்ப்பு தர மறுத்துள்ளனர்.

நடிகர்களை பற்றி வெளிப்படையாக பேசும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வடிவேலு நடிக்க வேண்டிய படத்தில் யோகி பாபு நடித்துள்ளார் அதற்கான காரணத்தையும் கூறினார். மனிதன் உயர்ந்து கொண்டு போனால் பணிவு வளர்ந்து கொண்டே போக வேண்டும். ஆனால் வடிவேலுக்கு திமிர்தான் அதிகமாக வளர்ந்து கொண்டே போகிறது என கூறினார்.

bayilvan-ranganathan-cinemapettai
bayilvan-ranganathan-cinemapettai

சக்தி சிதம்பரம் இயக்கிய பேய்மாமா படத்திற்கு முதலில் வடிவேலுதான் அணுகி உள்ளனர். ஆனால் வடிவேலுவின் திமிர் தனத்தை பார்த்த பலரும் இவரை வைத்து படத்தை எடுத்தால் படத்தை வெளியிட முடியாது ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் என கூறியதால் அந்த இயக்குனர் யோகிபாபுவை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மேலும் வடிவேலு திமிர் தனத்தை குறைக்காவிட்டால் இவர் நடிக்க வேண்டிய படங்கள் அனைத்தையும் மற்ற நடிகர்களுக்கு சென்று விடும் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் திமிர் தனத்தை வடிவேலு குறைத்தால் மட்டுமே அவருடைய பழைய இடத்தை பிடிப்பார் எனவும் கூறியுள்ளார்.

Trending News