ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

இணையத்தில் லீக்கான நாய் சேகர் படத்தின் கதை.. வடிவேலுக்கு பக்காவாக பொருந்தும் கதாபாத்திரம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. ஆனால் இயக்குனர் ஷங்கருக்கும், வடிவேலுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள்வராமல் சினிமாவை விட்டு சிலகாலம் விலகி இருந்தார்.

தற்போது 24ம் புலிகேசி படத்தின் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகமாக முறையில் முடிந்தது. அதனால்  இயக்குனர் சுராஜ் உடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன் எனும் படத்தில் நடித்து வருகிறார். முதலில் இப்படத்திற்கு நாய் சேகர் என பெயர் வைத்திருந்தனர்.

ஆனால் சதீஷ் நடிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கும் நாய் சேகர் என பெயர் வைத்துள்ளனர். ஆனால் இப்பெயரை வடிவேலுக்கு தர மாட்டோம் என கூறி மறுத்துள்ளனர். அதனால் வடிவேலு தனது படத்திற்கு ஒரே ஒரு வார்த்தையை சேர்த்து நாய் சேகர் ரிட்டன் என பெயர் வைத்துள்ளார்.

பலரும் நாய் சேகர் என்ற தலைப்பிற்கு ஏன் இவ்வளவு தூரம் அடித்துக்கொள்ள வேண்டும் என கூறி வந்தனர். ஆனால் படத்தின் கதை நாயை பற்றி என்பதால் தான் இவ்வளவு போராட்டம் என பலரும் கூறியுள்ளனர். தற்போது இப்படத்தின் கதை தெரியவந்துள்ளது. அதாவது வடிவேலு பணக்காரர்கள் வீட்டில் இருக்கும் நாயை திருடி வந்துவிடுவார்.

பின்பு அதே பணக்காரர்கள் நாய் வாங்குவதற்கு வடிவேலுவிடம் செல்வார்கள். வடிவேலுவும் ஒன்னும் தெரியாத போல் பேரம்பேசி நாயை அவர்களிடமே விற்று விடுவார். இதுதான் படத்தின் கதை என தெரியவந்துள்ளது. ஏற்கனவே வடிவேலு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது படத்தின் கதையை கேட்ட ரசிகர்கள் கண்டிப்பாக இப்படம் வெற்றி அடையும் என கூறி வருகின்றனர்.

vadivelu-naai-sekar-returns-poster
vadivelu-naai-sekar-returns-poster

மேலும் வடிவேலுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சரியான கதாபாத்திரம் எனவும் கூறி வருகின்றனர். இப்படத்தில் வடிவேலுக்கு ஏற்றது போல காமெடி காட்சிகளை வைத்துள்ளதாக இயக்குனர் சுராஜ் கூறியுள்ளார். வடிவேல் நடிக்கும் காட்சிகளில் அனைத்தும் கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் எனவும் கூறியுள்ளார்.

Trending News