செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஒரே படத்துக்கு பின் இன்றுவரை சுந்தர் சி உடன் இணையாத வடிவேலு.. சீக்ரெட்டாக காய் நகர்த்திய ரைட்

Actor Vadivelu : இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்த சுந்தர் சி இப்போது நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அரண்மனை 4 படத்தை எடுத்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் சுந்தர் சி யின் படங்களில் வடிவேலு நடித்து வந்தார்.

அதுவும் தலைநகரம் படத்தில் ரைட் மற்றும் நாய் சேகர் காம்போ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படம் உருவாகி இருந்தது. இப்படத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா நடித்திருந்தனர்.

இதில் வடிவேலுவும் கிரேட் கரிகாலனாக நடித்திருந்தார். இந்த சூழலில் ரெண்டு படத்தில் சந்தானம் நடிப்பது வடிவேலுவுக்கு தெரியாதாம். ஏனென்றால் வடிவேலுவின் போஷன் மற்றும் சந்தானத்தின் போஷன் தனித்தனியாக எடுக்கப்பட்டிருக்கிறது.

குஷ்பூ கூப்பிட்டும் மறுத்த வடிவேலு

அதன்பிறகு எடிட்டிங்கில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வடிவேலு சுந்தர் சி மீது கோபப்பட்டு இருக்கிறார். அதன் பிறகு சுந்தர் சியின் படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டாராம்.

குஷ்பூ எவ்வளவு கூப்பிட்டும் வடிவேலு சுந்தர் சி பட வாய்ப்பை நிராகரித்துள்ளார். ஆனாலும் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

இதையே டைட்டிலாக வைத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News