வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பண்ணை வீட்டில் ஒன்னும் பண்ண முடியலன்னு கடும் ஆதங்கம்.. வடிவேலு பார்ட்னரிடம் பஞ்சரான பயில்வான்

பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் சினிமாவைப் பற்றி ஒன்னு ரெண்டு விஷயத்தை தெரிந்து கொண்டு பிரபலங்களை பற்றி மிகவும் கேவலமாக விமர்சித்து வருகிறார். அது மட்டுமல்ல படங்களின் ஆடியோ லான்ச் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று நடிகர் நடிகைகளிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இதனால் பயில்வான் ரங்கநாதனை பற்றி பல பிரபலங்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் வடிவேலுவுடன் இணைந்து நிறைய காமெடி காட்சிகளில் பார்ட்னராக நடித்த டெலிபோன் ராஜ், இப்போது பயில்வான் ரங்கநாதனை பஞ்சர் ஆக்கி இருக்கிறார்.

Also Read: குந்தவை போல குடும்பத்தை சந்திசிரிக்க வைத்த நந்தினி.. வெட்ட வெளிச்சம் ஆக்கிய பயில்வான்

சினிமாவில் பயில்வான் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் எப்படி நடிப்பார் என்பதையும் கேலி கிண்டல் செய்திருக்கிறார்.  படப்பிடிப்பு தளத்தில் பயில்வான் ரங்கநாதனால் நிற்க கூட முடியாது, கண்களில் தொடர்ந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும், ஒரு வசனத்தை பேச சொன்னால் ஒழுங்காக பேசத் தெரியாது மற்றும் ஞாபக மறதி அதிகமாக இருக்கக்கூடியவர்.

இந்த லட்சணத்தில் இப்போது எப்படி அவர் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை வாய் கூசாமல் பேசுகிறார் என்று தெரியவில்லை.  ஆனால் பயில்வானின் வீட்டுச் சூழல் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவரது குடும்பத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இப்படி ஒரு கேவலமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

Also Read: சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

சினிமாவில் இருக்கும் நடிகர்களுடன் நின்று போட்டி போட முடியாத இந்த சூழலில், எப்படி சம்பாதித்து வீட்டிற்கு பணம் கொடுக்க முடியும் என யோசித்து தான் இப்படி தரங்கெட்ட வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் யூட்யூபில் அடுத்தவர்களை பற்றி பேசி 500, 1000 அதிகபட்சம் 2000 சம்பாதித்து வீட்டிற்கு கொடுத்து வருகிறார். அவர் வீட்டிற்கு கொடுக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள்.

அதனால் யாரோ ஒரு நடிகர் யாரோ ஒரு நடிகையை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார் என்று தவறாக பேசி வருகிறார். அந்த நடிகரால் அந்த நடிகையை பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிகிறது. இவரால் முடியவில்லை. இவருக்கு என்ன வந்தது, வாய்க்கு வந்தபடி பேசுவாரா என்ன! என்று டெலிபோன் ராஜ் காட்டமாக பேசியிருக்கிறார்.

Also Read: சிவகார்த்திகேயனோட ஜோடி போட அதிதி சங்கருக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்தது.. சீக்ரெட்டை போட்டுடைத்த பயில்வான்

Trending News