கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளத்தில் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்ற செய்திதான் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் உண்மையான காமெடியை பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது.
முதலில் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து விட்டு பின்னர் சக நடிகர்களுடன் சேர்ந்து காமெடி வேடங்களிலும் நடிக்கவுள்ளதாக வடிவேலுவை அறிக்கை விட்டிருந்தார். அந்த வகையில் முதல் படம் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற பெயரில் உருவாகியுள்ளது.
ஆனால் இந்த படத்தின் தலைப்பு ஏற்கனவே காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு வைத்து விட்டதாக ஒரு பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. அந்த படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் தலைப்பை விட்டுக் கொடுக்குமாறு வடிவேலு மிரட்டியதாகவும் நேற்று செய்தி வெளியானது.
இவ்வளவு நாட்கள் சினிமாவில் வடிவேலு நடிக்காமல் இருந்ததற்குக் காரணமே இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் பஞ்சாயத்து தான். சங்கரிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை வடிவேலு திருப்பி தராததால் தான் இவ்வளவு பஞ்சாயத்து. அதை சமீபத்தில் லைக்கா நிறுவனம் கொடுத்து அடைத்துவிட்டது.
இன்னும் சில கோடிகள் பாக்கி வரவேண்டியிருக்கிறது. இருந்தாலும் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நேரத்தில் வடிவேலுவை ஏன் சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என தயாரிப்பாளர் ஒருவர் போன போகட்டும் என விட்டு கொடுத்து விட்டார்.
தொடர்ந்து மீண்டும் வடிவேலு இதே மாதிரி அழிச்சாட்டியம் செய்தால் கண்டிப்பாக அவருடைய கேரியர் காலியாகும் அளவிற்கு வேலையை செய்து விடுவேன் எனவும் கூறிவருகிறாராம் அந்த தயாரிப்பாளர்.