தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த வைகைப்புயல் வடிவேலு கடந்த சில வருடங்களாக சொல்லிக்கொள்ளும்படி சினிமாவில் இல்லை என்றாலும் சமூக வலைத்தள பக்கத்தை திறந்தால் எங்கு திரும்பினாலும் அவரது முகம் தான்.
காரணம் மீம்ஸ் கிரியேட்டர்கள்தான், அவர்களுக்கு கோடான கோடி நன்றி சொல்லி தன்னுடைய அடுத்த ரீ என்ட்ரியை தொடங்கியுள்ளார் வடிவேலு. வடிவேலு இவ்வளவு நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு காரணமே அரசியல் தான்.
அந்த சர்ச்சை எல்லாம் ஓய்ந்து மீண்டும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்த வடிவேலு, ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவன் தான் இந்த படத்தையும் இயக்க ஒப்பந்தமானார்.
ஆனால் ஆரம்பத்திலிருந்தே வடிவேலின் தலையீடுகள் அதிகமாக இருந்ததால் அந்த படத்தை நினைத்த மாதிரி எடுக்க முடியவில்லை என சிம்புதேவன் ஷங்கரிடம் புகார் அளிக்க, அவரும் வடிவேலுவை கண்டித்துள்ளார். அதன்பிறகு அட்வான்ஸுடன் ஓட்டம் பிடித்த வடிவேலு ஆளையே காணவில்லை.
இதனால் சங்கர் கடுப்பாகி வடிவேலு எந்த படத்திலும் நடிக்க முடியாதபடி செய்தார். தற்போது இருவருக்கும் சமரசம் பேசி முடித்துள்ளார் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ். இவர்தான் வடிவேலுவின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளார்.
வடிவேலு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என இல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களில் பழையபடி காமெடியாகவும் நடிக்க முடிவு செய்துவிட்டாராம். இந்த செய்தியை கேட்டதுமே வடிவேலு ரசிகர்களுக்கு ஒரே குஷி.
இதன் காரணமாக தற்போது மீண்டும் தான் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுப்பதை உறுதி செய்த வடிவேலு இனி எல்லாத்துக்கும் சேர்த்து திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தன்னுடைய வட்டாரங்களில் கூறி கெத்தாக களம் இறங்கிவிட்டார்.