திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சன் டிவி சீரியல் இயக்குனர் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வரும் வடிவேலு.. இவங்க செம ஹிட் கூட்டணியாச்சே!

கடந்த சில நாட்களாக வடிவேலு சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று தான் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. நடிக்க தெம்பு இருந்தாலும் வாய்ப்பு கொடுக்க யாரும் இல்லையே என புலம்பியதாக ஒரு தகவல் வெளியானது. இது மீம்ஸ் ரசிகர்கள் மனதை மிகவும் பாதித்து விட்டது.

இன்று நடக்கும் சமூக அவலங்களை அசால்டாக வடிவேலுவை வைத்து ஒரு மீம் தயாரித்து மக்களுக்கு அந்த பிரச்சனையை எளிதில் கொண்டு சேர்த்து விடுகின்றனர். அந்த அளவுக்கு திறமையான காமெடியனை தமிழ் சினிமா இழந்து விட்டதே என வருத்தப்பட்டனர்.

இந்நிலையில் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்கனவே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த சன் டிவி சீரியல் இயக்குனர் மூலம் மீண்டும் சினிமாவில் காமெடியனாக வர உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

சன் டிவியில் மெட்டிஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற சீரியல்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திருமுருகன். இவர் ஏற்கனவே நடிகர் பரத்தை வைத்து எம் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

thirumurugan-cinemapettai
thirumurugan-cinemapettai

இந்த இரண்டு படங்களில் எம் மகன் படம் மட்டுமே வெற்றிப் படமாக இருந்தாலும் இந்த இரண்டு படங்களிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் பயங்கரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக விரைவில் திருமுருகன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், அதில் காமெடியனாக மீண்டும் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் வடிவேலு காமெடியனாக தன்னுடைய அரியணையில் வந்து அமரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Trending News