திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜயகாந்த் பெயர் சொன்னதால் வாய்ப்பு தர மறுத்த வடிவேலு.. தூக்கிப் போட்டு மிதித்து இருப்பேன்!

பொதுவாகவே எந்த அளவுக்கு ஒருத்தருக்கு திறமை இருக்கிறதோ அந்த அளவுக்கு அவரிடம் கர்வமும் நிறைந்திருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக சினிமாவில் நாம் நிறைய பேரை கண்கூடாக பார்த்து கேட்டிருப்போம். அதில் பலரும் இருக்கிறார்கள் என்றாலும் நகைச்சுவை நடிகராக எந்த அளவுக்கு அடிமட்டத்திலிருந்து வந்தோம் என்பதை மறந்து மற்றவர்களை கேவலப்படுத்தும் ஒருவராகத் தான் வடிவேலு உடைய குணம் இருக்கிறது.

இவருடைய குணத்துக்கு தான் பத்து வருடமாக சினிமாவில் தலை காட்ட முடியாத அளவிற்கு பரிதாபமாக இருந்தார். ஆனால் திரும்பி வந்தும் கொஞ்சம் கூட மாறவில்லை என்பது அவருடைய பேச்சிலே தெரிகிறது. இவர் சினிமாவில் நுழைந்த போது நம் மூஞ்சி ஏதாவது ஒரு காட்சியில் தெரிந்திடாதா என்று ஏக்கத்துடன் இருந்தார். அப்பொழுது இவருக்கு உதவி செய்து கைத்தூக்கி விட்டவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

Also read: வடிவேலுக்கு பேரும் புகழும் வாங்கி தந்த 6 கதாபாத்திரங்கள்.. தோற்றத்தாலேயே எல்லாரையும் கவர்ந்த பாடி சோடா

அதன்பின் வடிவேலு ஒவ்வொரு படமாக வளர்ந்து வைகை புயல் என்ற பட்டத்துடன் உலா வந்தார். இதற்கிடையில் விஜயகாந்த் உடன் இவருக்கு ஏற்பட்ட பிரச்சினையால் அவரிடம் விலகி விட்டார். ஆனாலும் அவர் செய்த உதவியை நினைக்காவிட்டாலும் அவரை அவமானப்படுத்தாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதாவது ஒரு முறை இவரிடம் மீசை ராஜேந்திரன் ஏதோ வாய்ப்பு போய் கேட்டிருக்கிறார். அப்பொழுது வடிவேலு, இவரை ஏளனமாக பார்த்து நீங்கள் அந்த விஜயகாந்த் கூட சுத்திட்டு இருக்கவங்க தானே உங்களுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மீசை ராஜேந்திரன் நேற்று என்னை இங்கே வா என்று கூப்பிடும் போது உங்களுக்கு தெரியாதா? நான் விஜயகாந்த் கூட இருக்கிறேன் என்று கேட்டிருக்கிறார்.

Also read: அப்பவே வடிவேலுவை தட்டி வைத்த கவுண்டமணி.. வளர்த்து விட்டவர் காலையே வாரிவிட்ட வைகைப்புயல்

அதற்கு வடிவேலு உங்களுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை நீங்க வெளியில போகலாம் என்று சொல்லி இருக்கிறார். இதை கேட்ட அவர் அண்ணன் இதெல்லாம் சரியே இல்லை. எனக்கு பண்ணின மாதிரி வேறு எந்த நடிகருக்கும் பண்ணிடாதீங்க தப்பு அண்ணன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் உண்மையில் இவருக்கு எந்த அளவுக்கு கோபம் வந்திருக்கிறது என்றால் அப்படியே அவரை தூக்கி போட்டு மிதிக்கலாம் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் அவர் டாப்பில் இருந்ததால் அப்படியே அமைதியாக போய்விட்டார்.

பிறகு இந்த விஷயம் தெரிந்த கேப்டன் இவருக்கு போன் பண்ணி அலுவலகத்திற்கு வர சொல்லி இருக்கிறார். அப்பொழுது நடந்து விஷயத்தை சொன்ன மீசை ராஜேந்திரன் இடம் நீ சும்மாவா விட்டுட்டு வந்த என்று கேட்டிருக்கிறார். அதற்கு இவர், வடிவேலு பெரிய நடிகர் நான் ஏதாவது பண்ண போய் அது நடிகர் சங்கத்து வரைக்கும் பிரச்சினையை கொண்டு போய் விடும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விஜயகாந்த் என்ன பெரிய நடிகர் சங்கம் நீ பண்ணின பிறகு பிரச்சினை வந்திருந்தாலும் நான் சமாளித்து இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: விஜயகாந்த் மனதில் லப்டப்பை ஏற்படுத்திய 4 நடிகைகள்.. வயசு கோளாறு என ஆசையை மறைத்த கேப்டன்

Trending News