திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்பு இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு. . மாமன்னன் படத்தால் அடித்த ஜாக்பாட்

Simbu – Vadivelu: நடிகர் வடிவேலு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் எந்த வாய்ப்புகளும் இல்லாமல் ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்த இவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் காத்திருந்தது. ஹீரோவாகவும், காமெடி காட்சிகளில் நடித்தும் பழைய வடிவேலுவுக்கான வரவேற்பு கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார்.

இது போன்ற ஒரு காலகட்டத்தில் வடிவேலுவின் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கும் படம் தான் மாமன்னன். சிரித்துக் கொண்டே நகைச்சுவை செய்யும் வடிவேலுவை தாண்டி, இறுக்கமான முகத்துடன் எதார்த்தத்தை பேசிய வடிவேலுவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. இந்த படத்திற்குப் பிறகு வடிவேலுவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read:சந்தானத்தை ஓரங்கட்ட பார்த்த கவுண்டமணி.. சிம்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

இனி வடிவேலு காமெடி ட்ராக் பக்கம் திரும்ப முடியாத அளவுக்கு அவருக்கு மற்றொரு படம் அமைந்திருக்கிறது. ஏற்கனவே கமலஹாசன் படம் ஒன்றில் நடிப்பதற்கு வடிவேலு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருந்த சிம்புவுக்கு இந்த படத்தின் வெற்றி மிகப்பெரிய அஸ்திவாரத்தை போட்டுக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். மீண்டும் இந்த கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சிம்பு தன்னுடைய பழைய வேலைகளில் இறங்கி விட்டார்.

Also Read:ஏற்கனவே தளபதியுடன் நடித்துள்ள மாமன்னன் ரத்தினவேல்.. 2ம் முறையாக லோகேஷ் வைத்துள்ள டிவிஸ்ட்

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் படத்தில் நடிப்பார் எனவும் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ இவர்கள் இருவருக்கும் டகால்டி கொடுத்துவிட்டு கமல் தயாரிப்பில் படம் நடிக்க போகிறேன் என்று கிளம்பிவிட்டார்.

இதனால் தற்போது ட்ரெண்டில் இருக்கும் வடிவேலுவை வளைத்து போட முடிவு செய்து விட்டார்கள் கௌதம் மேனன் மற்றும் ஐசரி கணேஷ். இந்த படத்திற்கான கதை மற்றும் தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் வடிவேலு காமெடியனாக நடித்திருக்கும் சந்திரமுகி 2 விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:மொத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒத்த வார்த்தை.. லியோ ஆடியோ லான்ச்காக காத்திருக்கும் விஜய்

Trending News