கடந்த பத்து வருடங்களில் சினிமாவில் அவ்வப்போது தலை காட்டி வந்த வடிவேலு கடைசி நான்கு வருடங்களில் சுத்தமாக தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை. வடிவேலு நடிப்பில் தொடங்கப்பட்ட படங்கள் பலவும் பஞ்சாயத்தில் சிக்கி தவித்தது.
அதில் ஒன்று இம்சை அரசன் 24ஆம் புலிகேசி. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய திரைப்படம் இம்சை அரசன் 24ம் புலிகேசி.
இந்த படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து வடிவேலு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இம்சை அரசன் படம் பெற்ற வெற்றியை மற்ற படங்கள் பெறவில்லை. அதேசமயம் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்திலும் நடிக்கத் தவறவில்லை.
ஒரு அரசியல் சர்ச்சையில் சிக்கி காணாமல் போன வடிவேலு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கத்திச்சண்டை, மெர்சல் போன்ற படங்களின் மூலம் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்தார். அப்போதுதான் சங்கர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை தொடங்கினார்.
அதில் வடிவேலுவின் தலையீடுகள் அதிகமாக இருந்ததால் நினைத்தபடி படம் செய்ய முடியவில்லை என சிம்புதேவன் சங்கரிடம் சொல்ல ஷங்கருக்கும் வடிவேலுக்கும் பஞ்சாயத்து முற்றி இறுதியில் அந்தப் படம் கைவிடப்பட்டது.
மீண்டும் வந்த வடிவேலுவுக்கு அந்த சமயத்தில் மார்க்கெட் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வடிவேலுவுக்கு 8 கோடி சம்பளம் கொடுத்து அந்த படத்தில் ஒப்பந்தம் செய்தாராம் சங்கர். இப்போது தன் மீது உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்த பின்னர் ரீ என்ட்ரி கொடுக்கும் வடிவேலுவுக்கு 8 முதல் 10 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் பலரும் ரெடியாக இருக்கிறார்களாம். இதைக் கேள்விப்பட்ட பல காமெடி நடிகர்கள் பதறிப்போய் கிடக்கின்றனர்.