நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி கேட்டு அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வடிவேலுவின் தோற்றம் உள்ளது.
நேற்றுவரை துருதுருவென சுற்றிக்கொண்டிருந்த விவேக் இன்று நம்முடன் இல்லை. இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பலரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்து பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் விவேக்கின் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகருமான வடிவேலு மதுரையில் இருப்பதால் வர முடியாத சூழ்நிலையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் வடிவேலு கதறி கதறி அழுததை பார்த்த ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். அதைவிட வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் வடிவேலுவின் தோற்றம் தான்.
திடகாத்திரமாக இருந்த வடிவேலு சமீபகாலமாக இளைத்துக் கொண்டே போவது ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது. முன்னர் இருந்த சுறுசுறுப்பும் தற்போது இல்லை. அவரை திரையில் மிஸ் செய்யும் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர்.
விரைவில் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ள வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சரித்திரத்தை படைப்பார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இருந்தாலும் உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதையும் ரசிகர்கள் அந்த வீடியோவில் கீழ் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.