வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

தரம் தாழ்ந்து போன வடிவேலு.. சிவகார்த்திகேயனை பார்த்து கத்துக்கோங்க ஜி!

வைகைப்புயல் வடிவேலு ஆரம்ப காலங்களில் சினிமாவுக்கு வருவதற்கு பலரை நாடியுள்ளார். அப்போது நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுக்கு சிறுசிறு கதாபாத்திரங்கள் கொடுத்தார். அதன் பிறகு வடிவேலு மதுரையில் இருந்து வந்ததால் விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களில் வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.

அதன் பிறகு வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது. அப்போது கொடிகட்டி பறந்த கவுண்டமணி, செந்தில் காமெடிகளை ஓவர்டேக் செய்து வடிவேலு எல்லா படத்திலும் கமிட்டாகி நடித்து வந்தார். இந்நிலையில் ராஜ்கிரன் பொருளாதார நெருக்கடியில் உள்ள போது வடிவேலு சந்தித்துள்ளார்.

அப்போது ராஜ்கிரன் கேட்காமலேயே வடிவேலு 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். ஆனால் அதன்பிறகு சினிமா பிரபலங்களிடம் ராஜ்கிரணுக்கு 5 லட்சம் கொடுத்ததை வடிவேலு தம்பட்டம் அடித்துள்ளார். ஆனால் தன் வறுமையில் இருந்ததை அறிந்த தானாக வந்து வடிவேலு பணத்தை கொடுத்துவிட்டு இப்படி என்னை அசிங்கப்படுத்துகிறார் என பலரிடம் ராஜ்கிரன் வருத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவிகள் செய்து வருகிறார். ஆனால் இதை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக தான் செய்து வருகிறார். இதை அறிவதற்காக சினிமா துறையைச் சார்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது சிவகார்த்திகேயன், நா முத்துக்குமார் இறந்தபோது அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன், அப்போது அவருடைய மகள் அருகில் அமர்ந்திருந்தார். அதை பார்க்கும் போது அவ்வளவு மன வேதனையாக இருந்தது. அதனால்தான் அந்த குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறேன் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேலும், இந்த விஷயத்தை தயவு செய்து வெளியில் யாரிடத்திலும் சொல்லிவிட வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார். சீனியர் நடிகரான வடிவேலு நடிகருக்கு செய்த உதவியை தம்பட்டம் அடித்த நிலையில் சிவகார்த்திகேயன் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பதைப்போல யாருக்கும் தெரியாமல் பல உதவிகள் செய்து வருகிறார்.

Trending News