வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சர்க்கரை நோய் மாத்திரை வாங்கக்கூட வழியில்லாத நடிகர்.. மீண்டும் கொடூர முகத்தை காட்டும் வடிவேலு.!

Actor Vadivelu: வடிவேலு என்ன தான் ரீ என்ட்ரி கொடுத்து வந்திருந்தாலும் இவரைப் பற்றி சமீபத்தில் எந்த ஒரு நல்ல விஷயங்களும் வரவில்லை. இவர் நடிக்கும் பொழுது இவருடன் நடித்த துணை நடிகர்களாக இருக்கட்டும் மற்ற நடிகர்களும் இவருடைய குணத்தைப் பற்றி மோசமாகத் தான் சொல்லி வருகிறார்கள். அதைப் பார்க்கும் பொழுது ஓரளவுக்கு இவருடைய கேரக்டர் எந்த மாதிரி என்று நம்மால் யூகிக்க முடிகிறது.

அந்த வகையில் வடிவேலு உடன் நிறையப் படங்களில் நடித்த பாவா லட்சுமணன் தற்போது சர்க்கரை நோய் பிரச்சினையால் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்பொழுது இவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருந்ததால் கால் கட்ட விரலை எடுத்து இருக்கிறார்கள்.

Also read: இந்த மூணு நடிகர்களின் சாவுக்கு கூட போகாத வடிவேலு.. உண்மையை உடைத்த மீசை ராஜேந்திரன்

அதன் பின் இவர் பேசிய வீடியோவில் எனக்கு சர்க்கரை நோய் மாத்திரை வாங்குவதற்கு கூட என்னிடம் காசு இல்லாமல் தவித்து இருந்தேன். அந்த அளவுக்கு பண நெருக்கடியில் அவஸ்தை பட்டேன். ஆனால் தற்போது ஒரு அளவிற்கு நன்றாக இருக்கிறேன். நான் மருத்துவமனையில் வந்து சேர்ந்தவுடன் நிறைய நடிகர்கள் என் நிலைமையை அறிந்து என்னிடம் போனில் ஆறுதலாக பேசி மருத்துவச் செலவிற்கு உதவி செய்து இருக்கிறார்கள்.

அதில் சந்தானம் உட்பட நிறையப் பேர் பேசி இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு மட்டும் இன்றுவரை ஒரு போன் கூட பண்ணவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இனியும் அவர் என்னிடம் பேசப் போவதில்லை அது தெரிந்த விஷயம் தான். ஏனென்றால் அவரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.

Also read: ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

அத்துடன் தற்போது பல நடிகர்கள் நேரடியாகவே யூடியூப் மூலம் அழுது கொண்டே வடிவேலு எந்த மாதிரியான ஆள் என்று கூறியிருக்கிறார்கள். அவரிடம் யாரும் எந்த உதவியும் பெறவே முடியாது. அந்த அளவுக்கு கொடூர மனசு படைத்தவர்.

மேலும் இவரைப் பற்றி வெளிவரும் அனைத்து செய்திகளையும் அவர் தெரிந்து கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும் அதை எல்லாம் கண்டு அசர மாட்டார். ஏனென்றால் அவர் தற்போது ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார். அதனால் அவர் எதையும் கண்டு கொள்ள மாட்டார்.

Also read: மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

Trending News