சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

சொந்த காசை போட்டு பிரபல காமெடி நடிகரை வீட்டில் முடக்கிய வடிவேலு.. கர்மா ஒரு பூமராங்குன்னு சும்மாவா சொல்றாங்க!

Vadivelu: நன்றாக வளர்ந்து வந்த காமெடி நடிகர் ஒருவரை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறார் நடிகர் வடிவேலு.

வைகைப்புயல் வடிவேலுவை பற்றி அவ்வப்போது கொஞ்சம் நெகட்டிவ்வான விஷயங்கள் வெளிவரும். அப்படித்தான் தற்போது இந்த விஷயமும் வெளியில் வந்திருக்கிறது.

வெற்றிக்கொடி கட்டு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் பெஞ்சமின். அதன் பின்னர் தொடர்ந்து விவேக் மற்றும் வடிவேலு காமெடியில் இடம் பெற்றார்.

ஒரு காலகட்டத்தில் அவருக்கு தனியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆட்டோகிராப், திருப்பாச்சி போன்ற படங்களில் தன்னுடைய தனித்துவமான காமெடி மூலம் நிலைத்து நின்றார்.

திருப்பாச்சி படத்திற்குப் பிறகு பெஞ்சமின் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதற்கு காரணமாக அவர் வடிவேலுவை சொல்லி இருக்கிறார்.

சோலோ காமெடியனாக தொடர்ந்து இவர் படங்களில் நடித்து வந்தது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லையாம்.

இதனால் இரண்டு மூன்று தயாரிப்பாளர்களை செட் பண்ணி அட்வான்ஸ் கொடுக்க வைத்து அவருடைய மொத்த டேட்டையும் வாங்கி இருக்கிறார்.

ஆனால் எந்த ஒரு படத்திற்குமே படப்பிடிப்பு ஆரம்பிக்க வில்லையாம்.

அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வேறு படத்திற்கும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் படப்பிடிப்புக்கு கூப்பிடுவார்கள் என்று வீட்டிலேயே முடங்கி இருந்திருக்கிறார் பெஞ்சமின்.

தன்னுடைய செல்வாக்கு மூலம் பெஞ்சமினை வீட்டில் முடங்க வைத்த வடிவேலு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். இதைத்தான் கர்மா ஒரு பூமராங் என்று சொல்வார்கள் போல.

Trending News