சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

இன்னும் பயிற்சி வேண்டுமோ, போதுமடா சாமி என்னை விட்ருங்க.. போதை தெளிந்த வடிவேலு

வைகைப்புயல் வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி இப்போது தான் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அதன் பின்பு வடிவேலு நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகவில்லை. கடைசியாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் வெளியானது.

லைக்கா தயாரித்த இந்த படத்தை போட்ட பட்ஜெட் கூட படக்குழுவால் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் அவரது ரசிகர்கள் வடிவேலு திரும்பி வந்து விட்டார், காமெடிக்கு இனி தமிழ் சினிமாவில் பஞ்சம் இருக்காது என மாஸ் பில்டப் கொடுத்து வந்தனர். ஆனால் அது அப்படியே உல்டாவானதால் தற்போது வருத்தத்தில் உள்ளனர்.

Also Read : ஒரே பட தோல்வியால் சரியும் வடிவேலுவின் கொஞ்சமா இருந்த மார்க்கெட்.. சாபத்தை பழிக்க வைத்த விஜய் சேதுபதி

இந்நிலையில் வடிவேலு ஹீரோவாக நடித்த படங்களில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை தவிர வேறு ஒரு படம் கூட ஓடவில்லை. ஹீரோவாக நடிக்க இன்னும் பயிற்சி வேண்டுமோ என வடிவேலுவின் விசுவாசிகள் கூறி உள்ளனர். இது போதும்டா சாமி என வடிவேலு முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளாராம்.

அதாவது வடிவேலும் இனி ஹீரோவாக படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார். பழையபடி எல்லா படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் தான் நடிக்க விருக்கிறாராம். இப்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also Read : 65 வயசு, உருவ கேலி வடிவேலுவின் படம் இனி ஓட வாய்ப்பு இல்ல.. நாய் சேகர் பிளாப் என முன்பே கணித்த பிரபலம்

அதேபோல் பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். இனிமேல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கலாம், ஹீரோவாக நடித்து இமேஜை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவில் உள்ளார்.

இப்போதாவது வடிவேலுக்கு ஹீரோ மமதை தெளிந்துவிட்டது என பலரும் கூறிவருகிறார்கள். இனிமேல் வடிவேலுக்கு தொட்டதெல்லாம் தொடங்கும் என்பது போல பழையபடி காமெடியில் ஒரு கை பார்க்க உள்ளார். ஆனால் இவருடைய பழைய காமெடிகள் இப்போது ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற கேள்வியும் எழந்துள்ளது.

Also Read : நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பெயர் வாங்கிய நடிகர்.. பொறாமையால் மொத்த படத்தையும் குழப்பி விட்ட வடிவேலு

- Advertisement -spot_img

Trending News