திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தேவர்மகன் படத்திற்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. உதயநிதியின் அரசியலை பற்றி பேசிய வடிவேலு

எப்போதும் ரசிகர்கள் நினைவில் நிற்கும் கமலின் தேவர்மகன் படத்தில் இசக்கி என்னும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்தவர்தான் வடிவேலு. அதன் பிறகு எத்தனையோ காமெடி வேடங்களில் நடித்தாலும் இது போன்ற குணச்சித்திர கேரக்டர்கள் அவருக்கு அதிகம் கைகொடுக்கிறது.

அப்படித்தான் இவர் தற்போது உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கமல் உட்பட பல திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Also Read: மாமன்னன் உதயநிதியை அசர வைத்த சிவகார்த்திகேயன்.. ட்ரெண்டாகும் நியூ லுக் போட்டோ

அப்போது மேடையில் பேசிய வடிவேலு இப்படம் உதயநிதிக்கு கடைசி படம் என சொல்ல முடியாது என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார். அதாவது அவர் இவ்வளவு நாளாக சினிமாவில் ஹீரோவாக நடித்தார். இனிமேல் அரசியலில் ஹீரோவாக ஜெயிப்பார் என்று புகழாரம் சூடினார். அதைத்தொடர்ந்து மாமன்னன் படம் பற்றியும் அவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் தேவர் மகன் படத்திற்கு பிறகு எனக்கு மிகப்பெரும் ஒரு கதாபாத்திரம் இப்படத்தில் கிடைத்திருக்கிறது. தேவர் மகன் அரசியல் படம் கிடையாது. ஆனால் இப்படம் அரசியலைப் பற்றி சொல்லும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Also Read: வம்பை விலை கொடுத்து வாங்கும் கமல்.. உலக நாயகன் அனுபவத்திற்கு தகுதியானவர் ரஜினி தான்

இதை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய அரசியலை குறிப்பிடும் வகையில் மாரி செல்வராஜ் பல தரமான காட்சிகளை வைத்திருப்பார் என்று தெரிகிறது. அதிலும் உதயநிதி இப்போது முழு நேர அரசியலில் இறங்கி விட்டதால் அவருடைய கடைசி படமான மாமன்னன் நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த வகையில் கமல் கூட இது குறித்து குறிப்பிட்டு இருந்தார். இது என்னுடைய அரசியலை கூறும் படம் என்று அவர் கூறியிருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படி ஒவ்வொருவரும் இப்படத்தின் அரசியலை பற்றி கூறுவதை பார்த்தால் உதயநிதி தரமான சம்பவத்தை இறக்கப் போகிறார் என்பது தெளிவாக புரிகிறது.

Also Read: சித்தார்த்தின் டக்கரான நடிப்பில் வெளிவர உள்ள 5 படங்கள்.. கமலுடன் போட்ட மாஸ் கூட்டணி

Trending News