செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Vadivelu : இனி சினிமால ஆணி புடுங்க முடியாதுன்னு சன் டிவிக்கு வந்த வடிவேலு.. விஜய் டிவிக்கு போட்ட ஸ்கெட்ச்

வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்டரி கொடுத்தார். இந்த படம் ஊத்திக் கொண்ட நிலையில் அடுத்ததாக நடித்த படம் தான் மாமன்னன். வடிவேலுவை வேறு ஒரு பரிமாணத்தில் மாரி செல்வராஜ் காட்டி இருந்தார்.

ஆனாலும் அதன் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 போன்ற சில படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இவ்வாறு வெள்ளிதிரையில் தொடர்ந்து பிளாப் கொடுத்து வரும் நிலையில் இனி இங்கு ஆணி புடுங்க முடியாது என சின்னத்திரைக்கு வந்துவிட்டார்.

அதுவும் சன் டிவி பக்கா பிளான் போட்டு வடிவேலுவை தட்டி தூக்கி இருக்கிறது. அதாவது விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற பிரபல நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இப்போது சன் டிவிக்கு வந்திருக்கிறார்.

சன் டிவியில் களம் இறங்கும் வடிவேலு

அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அப்படியே காப்பி அடித்து தான் சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். அதுவும் இந்நிகழ்ச்சிக்கு டாப் குக்கு டூப் குக்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தான் வடிவேலு பங்கு பெற இருக்கிறார். இதற்கு ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம் வடிவேலு. விஜய் டிவியின் டிஆர்பியை உடைக்க சன் டிவி இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் வடிவேலு கேட்ட சம்பளத்தையும் சன் டிவி மாறன் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போல் இந்த நிகழ்ச்சியும் வெற்றி பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News