வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவிற்கு பல காமெடி படங்களை கொடுத்துள்ளார். சாதாரணமாக எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் வடிவேலுவின் காமெடியை ஒப்பிட்டு வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். புயல், மழை, கொரோனா என பல நிகழ்வுகளில் இவரது காமெடிகளை வைத்து ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.
வடிவேலுக்கு ஒருபுறம் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், மற்றொருபுறம் அவருடன் இருக்கும் சக நடிகர்கள் சிலர் வெறுப்பை காட்டி வருகிறார்கள். அதாவது வடிவேலுக்கு என்று ஒரு காமெடி குரூப் உள்ளது. அதில் உள்ள நபர்களை தான் தனது காமெடி காட்சிகளில் வடிவேலு பயன்படுத்தி வருகிறார்.
Also Read : அஜித்தை எகத்தாளமாக பேசிய வடிவேலு.. ஒதுங்கிப் போனாலும் தேடி போய் வம்பிழுத்த வைகைப்புயல்
இந்நிலையில் வடிவேலு ஓவர் திமிர் பிடித்த ஆடுபவர் என்றும், தன்னுடன் இருக்கும் மற்ற யாரையும் வளர விட மாட்டார் என சில பிரபலங்கள் குறி வருகிறார்கள். இதனால் கிட்டத்தட்ட 85 படங்கள் நடித்தும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என முத்துக்காளை ஒரு ஊடகத்தில் பேட்டி கொடுத்திருந்தார்.
ஏனென்றால் வடிவேலு மிகவும் அகம்பாவம் பிடித்தவர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர் பயில்வானும் வடிவேலுவை பற்றி சில தவறான கருத்துக்களை தனது ஊடகத்தில் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி வடிவேலுவுடன் நீண்ட காலமாக பயணித்த சிங்கமுத்துவும் வடிவேலுவை பற்றி தவறாக பேசியிருந்தார்.
Also Read : முதல் கோணல் முற்றிலும் கோணல்.. அந்த ஒரு விஷயத்திற்கு அவமானப்பட்ட வடிவேலு, ஆனா பிரயோஜனமில்ல
இவர்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கும் படி காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதாவது வடிவேலு தன்னை சுற்றி உள்ள 10 பேருக்குமே வாய்ப்பு கொடுக்க கூடியவர். தன்னால் ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்று தான் அவர் எப்போதுமே நினைப்பார்.
முத்துக்காளை சினிமாவில் வருவதற்கு காரணமே வடிவேலு தான். அவர் இல்லாமல் இவரால் ஒரு படத்தில் கூட நடித்திருக்க முடியுமா. வடிவேலுவால் எக்கச்சக்க கலைஞர்கள் தற்போது தமிழ் சினிமாவில் நிறைந்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இல்லை என்றால் இவர்கள் பெயிண்டர், ஆட்டோக்காரர்கள் இருந்திருக்க வேண்டும். எனக்கும் வாய்ப்பு கொடுத்து இந்த நிலைமைக்கு நான் இருக்கிறேன் என்றால் அதற்கும் வடிவேலு தான் காரணம் என்று டெலிபோன் ராஜ் கூறியுள்ளார்.
Also Read : ரீ என்ட்ரியில் மண்ணை கவ்விய வடிவேலுவின் வசூல்.. இதுக்கு ரெட் கார்டே போட்டு இருக்கலாம்