வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்த்திடமே பேரம் பேசி பண திமிரில் அசிங்கப்படுத்திய வடிவேலு.. சிரித்துக் கொண்டே கடந்து சென்ற கேப்டன்

Vijayakanth and Vadivelu: நகைச்சுவை கேரக்டருக்கு எத்தனை நடிகர்கள் போட்டி போட்டு வந்தாலும் இவருடைய இடத்திற்கு யாராலும் வர முடியாது என்று சொல்லும் அளவிற்கு உச்சாணிக்கொம்பில் இருந்தார் வடிவேலு. அப்படிப்பட்ட இவருடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் வடிவேலு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெரிய இடத்திற்கு போய்விட்டார்.

இருந்தாலும் விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களில் வடிவேலு நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அப்பொழுது கே பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் சொக்கத்தங்கம் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அந்த நேரத்தில் காமெடி கேரக்டரில் வடிவேலுவை போடுங்கள் என்று இயக்குனரிடம் விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அப்பொழுது வடிவேலு வளர்ந்து வந்த நேரம்.

இதனால் பாக்கியராஜ் கொஞ்சம் வடிவேலுவிடம் கேட்பதற்கு தயக்கத்துடனே இருந்தார். அந்த நேரத்தில் விஜயகாந்த் நான் சொன்னேன் என்று சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார் . அதன் பின் பாக்கியராஜ் வடிவேலுவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு வடிவேலு அதிகமான சம்பளம் கொடுத்தால் நான் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார். பாக்கியராஜ் கொஞ்சம் கம்மி பண்ண முடியுமான்னு கேட்டிருக்கிறார்.

Also read: விஜயகாந்த் நடிக்க தவறவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. கேப்டன் இடத்துக்கு மூன்று முறை வந்து ஜெயித்த மம்முட்டி

அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் வடிவேலு அப்படி எல்லாம் என்னால் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். பிறகு இப்படி நடந்த விஷயத்தை பாக்கியராஜ் விஜயகாந்த் இடம் சொல்லி இருக்கிறார். அதற்கு விஜயகாந்த் சரி விடுங்கள் நான் அவரை பார்த்து பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். இதனை அடுத்து ஒரு நாள் எதேர்ச்சியாக விஜயகாந்த் மற்றும் வடிவேலு ஏர்போர்ட்டில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அப்பொழுது விஜயகாந்த், வடிவேலுவிடம் பேசி நலம் விசாரித்து இருக்கிறார். அத்துடன் நான் சொக்கத்தங்கம் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறேன். அதனால் நீயும் வா என்று கூப்பிட்டு இருக்கிறார். அவங்க கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கோ என்று உரிமையில் சொல்லி இருக்கிறார். உடனே வடிவேலு நான் ஒரு படத்தில் நடிக்கும் பொழுது உங்களுக்கு சம்பளம் கம்மியாக கொடுத்து நடிக்க கூப்பிட்டால் நீங்க வந்துருவீங்களா பண திமிரில் அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விஜயகாந்த் அப்படியே சிரித்தபடி வடிவேலுவிடம், சரி ஓகே பார்த்துக்கோ என்று சொல்லிப் போயிருக்கிறார். அதாவது வடிவேலுவை பொறுத்தவரை சம்பளம் அங்கு ஒரு பிரச்சினையாக அவருக்கு இல்லை. விஜயகாந்துக்கு கீழே இனிமேல் நடிக்க கூடாது என்ற ஒரு திமிரில் தான் அப்படி தட்டிக் கழித்து அவமானப்படுத்தி இருக்கிறார்.

Also read: விஜயகாந்த் அரசியலுக்கு தூபம் போட்ட இயக்குனர்.. இவர் ஏத்தி விடலனா மனுஷன் உசுரோட இருந்திருப்பாரு

Trending News