செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித்தை எகத்தாளமாக பேசிய வடிவேலு.. ஒதுங்கிப் போனாலும் தேடி போய் வம்பிழுத்த வைகைப்புயல்

சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைக்கும் வடிவேலு நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் கரடு முரடு சுபாவம் கொண்டவர். அதனாலேயே அவரைப் பற்றிய சர்ச்சை செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் இவர் பலரிடமும் தேவையில்லாமல் ஏதாவது ஒரு பிரச்சனை செய்து ரெட் கார்டு வாங்கும் அளவுக்கு சென்றார்.

ஆனாலும் அவர் ரி என்ட்ரி கொடுத்த பிறகும் சில பிரச்சனைகள் செய்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் இவர் பல வருடங்களுக்கு முன் அஜித்துடன் ராஜா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார். ஆனால் அதன் பிறகு இவர்களுடைய கூட்டணி இன்று வரை இணையவில்லை. இதற்கு முக்கிய காரணம் வடிவேலுவின் ஏகத்தாளமான பேச்சும், சுபாவமும் தான்.

Also read: முதல் கோணல் முற்றிலும் கோணல்.. அந்த ஒரு விஷயத்திற்கு அவமானப்பட்ட வடிவேலு, ஆனா பிரயோஜனமில்ல

ஏனென்றால் அஜித் எப்போதுமே அனைவருக்கும் மரியாதை கொடுக்க கூடியவர். அவ்வளவு ஏன் ஜூனியர் ஆர்டிஸ்டுகளாக இருந்தாலும் கூட அவர்களை நலம் விசாரிப்பது, மரியாதையுடன் பேசுவது என்று வலம் வரும் அவரை அனைவருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட அஜித்தை வடிவேலு ரொம்பவும் சீண்டி பார்த்து இருக்கிறார்.

அதாவது அந்த பட சூட்டிங்கின் ஆரம்பத்தில் வடிவேலு அஜித்தை பார்த்து சார் என்று அழைத்திருக்கிறார். அதன் பிறகு அஜித் என்று பெயர் சொல்லி கூப்பிட்டு இருக்கிறார். பின் கொஞ்சம் நாள் ஆக ஆக அந்த மரியாதையும் குறைந்து வாப்பா, போப்பா என்ற ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார். இதனால் வேதனை அடைந்த அஜித் அதன் பிறகு அவரிடம் பேசுவதை முற்றிலுமாக குறைத்து இருக்கிறார்.

Also read: ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க பதட்டத்தில் விஜய் செய்த காரியம்.. துணிவை ஜெயிச்சே ஆகனுமாம்

இயக்குனர் கூட இதை கவனித்து விட்டு அஜித்திடம் வடிவேலுவின் போர்ஷனை இதோடு முடித்துக் கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அஜித் நீங்கள் கதையை எப்படி தயார் செய்திருந்தீர்களோ அப்படியே எடுங்கள். எனக்காக எதையும் மாற்ற வேண்டாம் என்று கூறி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அஜித் தன்னை ஒதுக்குவதை தெரிந்து கொண்ட வடிவேலு வேண்டுமென்றே அவரை கிண்டல் அடித்து பேசியிருக்கிறார்.

அதற்கு மேல் தாங்க முடியாத இயக்குனர் அஜித் மற்றும் வடிவேலு இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் தனித்தனியாக எடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு வடிவேலு அந்த படப்பிடிப்பில் ரொம்பவும் ஓவராக ஆட்டம் போட்டிருக்கிறார். இதெல்லாம் பார்த்து நொந்து போய் தான் அஜித் இனிமேல் வடிவேலு உடன் இணையவே கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறார். அந்த முடிவை அவர் இத்தனை வருடங்களாக பின்பற்றியும் வருகிறார்.

Also read: துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய மஞ்சு வாரியர்.. செல்லப் பெயர் வைத்த அஜித்

Trending News