ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வடிவுக்கரசியால் செருப்பாலேயே அடித்து கொண்ட இயக்குனர்.. கால வாரி விட்டதால் வந்த வினை

நடிகை வடிவுக்கரசி தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகை. இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக பண்ணக் கூடியவர் வடிவுக்கரசி. 1980களில் ஆரம்பித்த தன்னுடைய கலை பயணத்தை இன்று வரை வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.

1979 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான கன்னி பருவத்திலே திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வடிவுக்கரசி. அதன் பின்னர் முன்னணி ஹீரோக்களுக்கு அண்ணியாக, அக்காவாக, அம்மாவாக பல கேரக்டர்களின் நடித்ததிருந்தாலும் இவர் நடித்த நெகட்டிவ் ரோல்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

Also Read:வடிவுக்கரசி தேளாய் கொட்டிய 8 படங்கள்.. சிவாஜிக்கே தண்ணிகாட்டிய சூப்பர் ஹிட் படம்

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை திரைப்படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பினாலும், வசவுகள் பேசும் வசனங்களாலும் சிவாஜியையே மிரள விட்டவர் வடிவுக்கரசி. அதேபோன்று அருணாச்சலம் திரைப்படத்தில் கூன் விழுந்த கிழவியாக இவர் நடித்த அந்த வில்லி கதாபாத்திரம் திரையில் பார்ப்பதற்கே அவ்வளவு பயங்கரமாக இருக்கும்.

வடிவுக்கரசி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். அதில் தனக்கும் இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையைப் பற்றி பேசிய அவர், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாருக்கு ஜோடியாக நடிப்பதற்கு தன்னை ஒப்பந்தம் செய்ததாகவும், அதற்காக முதல் நாள் சூட்டிங்கிற்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது நடந்த சம்பவத்தை பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

Also Read:ரஜினியை திமிரில் திட்டிய வடிவுக்கரசி.. தண்டவாளத்தில் தலையை வைத்து விட்ட சம்பவம்.!

படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வடிவுக்கரசியை பாரதிராஜா அழைத்து இந்த படத்தில் விஜயகுமாருக்கு ஜோடி இல்லாமல் இருந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே இந்த கேரக்டரை நீ பண்ணப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வடிவுக்கரசி, ஒருவேளை விஜயகுமாருக்கு ஜோடியாக மஞ்சுளாவை தான் போடப் போகிறார்களோ என்று எண்ணி எவ பேச்சைக் கேட்டுட்டு இப்படி பண்றீங்க, எவள இந்த கேரக்டரில் நடிக்க வைக்க போகிறீர்கள் என்று கேட்டு சண்டையிட்டு இருக்கிறார்.

இதைக் கேட்டு டென்ஷனான பாரதிராஜா நான் செய்தது தவறு தான் என்று சொல்லி தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டாராம். நீ பொறுமையாக இரு நான் வேறு ஒரு கேரக்டரை உனக்கு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் பாரதிராஜா. ஆனால் வடிவுக்கரசியோ இனிமேல் இந்த படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று கத்திவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி விட்டாராம்.

Also Read:வில்லத்தனமான நடிப்பால் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்த வடிவுக்கரசி.. 90’s கிட்ஸ் பயந்து நடுங்கிய 4 படங்கள்

Trending News