வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வில்லத்தனமான நடிப்பால் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்த வடிவுக்கரசி.. 90’s கிட்ஸ் பயந்து நடுங்கிய 4 படங்கள்

அம்மன்: கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் அம்மன். இந்த படத்தில் சௌந்தர்யா தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பார். ஆனால் சுரேஷ் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொள்வார். இதனால் குடும்பத்தில் பலருக்கும் சௌந்தர்யாவை பிடிக்காமல் போகும்.

இப்படத்தில் வில்லியாக வடிவுகரசி, வில்லனாக ரம்மி ரெட்டியும் நடித்திருப்பார்கள். இப்படம் முழுக்க முழுக்க வெற்றி அடைந்ததற்கு இவர்கள் இருவருமே காரணம் என்று கூட கூறலாம். ஏனென்றால் இப்படத்தில் சௌந்தர்யாவை விட வில்லியாக நடித்த வடிவுக்கரசி நடிப்பும், ரம்மி ரெட்டி நடிப்பும் தான் அதிகமாக ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது.

அருணாச்சலம்: சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் அருணாச்சலம். இப்படத்தில் வில்லி பாட்டியாக நடித்த வடிவுக்கரசியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தில் ரஜினியை பார்த்து வடிவுக்கரசி அனாதை பயலே எனக் கூறுவார்.

இந்த வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எந்த அளவிற்கென்றால் வடிவுக்கரசி ஒரு முறை ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு ரசிகர் ரயிலின் முன் தண்டவாளத்தில் படுத்து வடிவுக்கரசி என் தலைவனை பற்றி தவறாகப் பேசியதற்கு மன்னிப்பு கூறினாள் மட்டுமே நான் எழுந்து கொள்வேன் என கூறினார். பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் வடிவுக்கரசி நான் பேசியது தவறுதான் என மன்னிப்பு கூறியதால் பின்பு ரயில் சென்றது. இப்படத்தில் இவருக்கு புகழ் வந்ததை விட பல பிரச்சனைகள் வந்தது என்று தான் கூற வேண்டும்.

முதல் மரியாதை: 1985ஆம் ஆண்டு வெளியாகி வடிவுக்கரசிக்கு புகழ் பெற்றுக்கொடுத்த திரைப்படம் முதல் மரியாதை. இப்படத்தில் சிவாஜிக்கு மனைவியாக இவர் நடித்த காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த படத்தில் வடிவுக்கரசி பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இவருக்கு என்றே தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை கொடுத்தனர். அந்த அளவிற்கு இவரது நடிப்பு படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

படிக்காதவன்: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் படிக்காதவன் இந்த படத்தில் சிவாஜிக்கு மனைவியாக வடிவுகரசி நடித்திருப்பார். இப்படம் அன்றைய காலத்தில் பெரிதும் பேசப்பட்ட படம் என்றே கூறலாம். அதுமட்டுமில்லாமல் வடிவுக்கரசியின் கதாபாத்திரமான ராதா கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.

Trending News