வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

வைபவ் நடித்து ஹிட்டான 5 படங்கள்.. தனியா நின்னா மனுஷன் ஜெயிக்க முடியாது போல

தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ கோதண்டராமி ரெட்டியின் மகன் நடிகர் வைபவ் ரெட்டி. கோதண்டராம இயக்கத்தில் 2007 இல் வெளியான கோதவா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் வைபவ். அதன்பிறகு தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். பல வெற்றிப் படங்களில் நடித்த வைபவ் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். என்னதான் கதாநாயகனாக நடித்தாலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சரோஜா: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சரோஜா. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சிவா, வைபவ், எஸ்பிபி சரண், பிரேம்ஜி, காஜல் அகர்வால், நிகிதா துக்ரல் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். சரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் வைபவ். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 100 நாட்கள் தாண்டி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

கோவா: வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, சம்பத் ராஜ், சினேகா என பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் கோவா. இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். இப்படத்தில் வைபவ் ராமராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வெற்றி பெறவில்லை.

ஈசன்: சசிகுமார் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈசன். இப்படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், ஏ எல் அழகப்பன், அபிநயா, அபர்ணா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் வைபவ் செழியன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011இல் வெளியான திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித், த்ரிஷா, வைபவ், அர்ஜுன், லட்சுமிராய், ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் சுமன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயர் மற்றும் பட வாய்ப்புகளை வாங்கி தந்தது. மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படமாக இருந்தது.

கப்பல்: ஜி கிரிஷ் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் கப்பல். இப்படத்தில் கதாநாயகனாக வைபவ் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சோனம் பஜ்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நகைச்சுவை திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

ஆம்பள: சுந்தர் சி இயக்கத்தில் 2015 தில் நகைச்சுவை திரைப்படமாக வெளியானது ஆம்பள. இப்படத்தில் விஷால், ஹன்சிகா மோத்வானி, பிரபு, சந்தானம், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், ஆண்ட்ரியா, வைபவ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருந்தார். பல பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை.

Aambala
Aambala

மேயாத மான்: ரத்தினகுமார் இயக்கத்தில் 2017 இல் வெளியான திரைப்படம் மேயாத மான். இப்படம் காதலுடன் கூடிய நகைச்சுவை படமாக இருந்தது. இப்படத்தில் வைபவ், பிரியா பவானி ஷங்கர், இந்துஜா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதுடன் இப்படமும் வெற்றி பெற்றது.

லாக்கப்: எஸ் ஜி லாரன்ஸ் இயக்கத்தில் 2020 ஜீ 5 இல் வெளியான திரைப்படம் லாக்கப். இப்படத்தில் வைபவ், வெங்கட் பிரபு, வாணிபோஜன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு கௌதம் வாசுதேவ் மேனன் கதை எழுதி இருந்தார். இப்படத்திற்கு அரோர்கொரேலி இசை அமைத்திருந்தார். இப்படம் ஒரு நாளைக்குள் நடந்து முடிகின்ற திரைக்கதையாக அமைந்திருந்தது. லாக்கப் திரைப்படம் வெற்றி பெறவில்லை.

sg-charles-lockup
sg-charles-lockup
- Advertisement -spot_img

Trending News